அடி மேல் அடி விழும் போது.. “பக்மினிஸ்டர் புல்லரை” நினைவில் கொள்ளுங்கள்..!

“நீங்கள் சாமானியர்கள் அல்ல. எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம்”

துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே.

இந்த சந்தர்ப்பங்களில் ‘குடி’ போன்ற தற்காலிக மறதிக்கான வழிகளை சிலர் நாடி அதை நியாய்ப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.

அப்படி தற்கொலை முடித்தவர் தான் ‘பக்மினிஸ்டர் புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 வயதில் திவாலாகி வாழ்வில் எல்லா நம்பிக்கையும் இழந்து, ஒரு டிசம்பர் இரவில் கொட்டும் பனியில், லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்த தண்ணீரில் குதிக்கும் முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார். அந்த அழகு அவர் மனதை அசைக்க அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார். Read the rest of this entry »

கல்லூரி வாழ்க்கை..ஆலோசனைகள்..

“கல்லூரி வாழ்க்கை”

பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இயல்பாகவே சில மனோரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகையப் சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

கடந்த 1985ம் ஆண்டிலிருந்தே கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், 30% மாணவர்கள்(Freshers), கட்டுப்படுத்த முடியாத உணர்வெழுச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநலம் தொடர்பான கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பல மாணவர்கள், கல்லூரி என்பதைப் பற்றி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் செயற்கையான விஷயங்களைப் பார்த்து, வேறுவிதமாக கற்பனை செய்து வைத்துள்ளார்கள் அல்லது தவறான நபர்கள் சொல்லும் போலியான தகவல்களையும் நம்பி ஏமாந்து போகிறார்கள். ஆனால் உண்மை நிலை என்னவெனில், அவர்கள் கற்பனை, நிஜத்தோடு பல இடங்களில் முரண்படுகிறது.

இதன்மூலம் மாணவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். கல்லூரியின் புதிய சூழ்நிலையை அனைத்து மாணவர்களாலும் உடனே உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ தேவைப்படுகின்றன. சிலருக்கோ, கல்லூரி சூழலைப் பழக, ஒரு வருடம்கூட ஆகிவிடுகிறது. Read the rest of this entry »

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்? – வாழ்க்கை பாடங்கள்

முயன்றால் உங்களால் முடியும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். Read the rest of this entry »

சர்க்கரை (Diabetes) நோய் வருமென்ற பயமா? இந்த யோகாவை முயற்சி பண்ணுங்கள்..!

“பசிமொத்தாசனம்”

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.

இந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.

பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம். Read the rest of this entry »

உடல் சோர்வை போக்க.. சில எளிய வழிகள்..!

உடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிறது. அந்த களைப்பை வேலை செய்யும் நாட்களிலே போக்காமல், வார இறுதியில் போக்குவார்கள்.

இப்படி செய்வதால் உடலில் ஏற்படும் களைப்பானது முற்றிலும் போகாது. களைப்பை போக்க நாம் எந்த ஒரு நேரத்தையும் ஒதுக்க தேவையில்லை, அனைத்தும் நாம் செய்யும் செயலிலேயே இருக்கிறது. Read the rest of this entry »

%d bloggers like this: