பழங்களை எப்படி? எப்பொழுது? – சாப்பிடணும்

” பழங்களில் எத்தனை நன்மைகள் “

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாமே.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரியவந்துள்ளது. பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சுவையான நொறுக்கு தீனி

நொறுக்குத்தீனி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. பழங்களையே நொறுக்கு தீனிபோல சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை அழகாக கட் செய்து அலங்கரித்தால் சுவையான நொறுக்குத்தீனி ரெடி. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள், போலேட் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த பழங்களை நீங்கள் கட் செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து சாப்பிடலாம்.

தினசரி லஞ்ச் நேரத்தில் சாலட் போலவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்களுடன் முந்திரி, பாதம், பிஸ்தா, போன்றவையும், கிரீம் கலந்து ஆரோக்கியமான டெசர்ட் ஆக சாப்பிடலாம்.

ப்ரேக் ஃபாஸ்ட் பழங்கள்

காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. ப்ரெட், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. அதேபோல் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆப்பிள், இனிப்பு கிழங்கு போன்றவை சத்தான காலை உணவாகும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

மேலும் பழங்களைப் பற்றிய தகவல்கள்

அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடுவது நல்லது இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாட்களுக்கு தொடர்ந்து பழம் மட்டுமே சாப்பிட்டால் உடல் ஜொலிக்கும் என்கின்றனர்.

சாப்பிடுவதற்கு முன்பு பழம் சாப்பிடுவது நல்லதா? அல்லது சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லதா என லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் விவரம்:

சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில் தெரியவந்தது.

‘தர்பூசணி சாப்பிட்டால் வாந்தி வருகிறது’, துரியன் பழம் சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது’, ‘வாழைப்பழம் சாப்பிட்டால் டாய்லெட் போக வேண்டும் என தோன்றுகிறது’ இப்படி பலர் சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். உணவு சாப்பிட்ட பிறகு, இந்த பழங்களை சாப்பிடுவதால்தான் இந்த நிலை. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இந்த பிரச்னைகளை முற்றிலும் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால், ஆயுள் கூடும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், ஆற்றல், மகிழ்ச்சி கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது. பழ ஜூஸ் குடிப்பதாக இருந்தால் பிரஷ்ஷாக குடியுங்கள். புட்டியில் அடைக்கப்பட்டது வேண்டாம். மெதுவாக உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். வேகவைத்த பழத்தையும் தவிர்க்கலாம். இதில் சத்து போய்விடும். எனினும், ஜூசாக குடிப்பதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மற்ற உணவுகளை தவிர்த்து பழங்கள், ஜூஸ் மட்டுமே சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் சுத்தமாகும். இதனால், முகம், கை, கால் என அனைத்து பகுதிகளும் பளபளப்புடன் ஜொலிக்கும் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

– இணையதள தகவல்.

One thought on “பழங்களை எப்படி? எப்பொழுது? – சாப்பிடணும்

  1. பானு August 26, 2016 / 8:14 pm

    குழந்தை இல்லாதவர்களுக்கு கிவி பழம் பயன் தரும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s