பெற்றோரை அவமதிக்கும் பிள்ளைகள்

“பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும்”

 ”ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர். Continue reading “பெற்றோரை அவமதிக்கும் பிள்ளைகள்”

Internet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices

அறிவது நல்லது – good to know

Internet (இண்டர்நெட்) பயன்படுத்தும் அனைவரும் இணையத்தில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் என்ற தலைப்பில் Google நிறுவனம் பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை அமைப்புடன் சேர்ந்து Good to Know (அறிவது நல்லது) எனும் தலைப்பில் ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கும் படி செய்துள்ளது கூகிள்.

தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களிடம் பேட்டி கண்டு அதன் அடிப்படையில் யூடியூப்பில் வீடியோ தகவல்களை வெளியிட்டுள்ளது.

அவற்றில் சில. Continue reading “Internet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices”

நிறைய தண்ணீர் குடிங்க, நோயின்றி ஆரோக்கியமா இருங்க

Benefits of Drinking Water

நமது உடம்பு எப்போதெல்லாம் கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான்.

ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. Continue reading “நிறைய தண்ணீர் குடிங்க, நோயின்றி ஆரோக்கியமா இருங்க”

“இன்ஜினியரிங்” மட்டுமே படிப்பா?

இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தால் போதும்,கார்ப்பரேட் நிறுவனத்தில் எக்கச்சக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது போன்ற மனப்பாங்கு, இன்றைய மாணவர்களையும்,பெற்றோரையும், இன்ஜினியரிங் படிப்பு மீது, அதீத மோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கடந்தாண்டில், இன்ஜினியரிங் முடித்த சுமார், 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை.

வெறும் மோகத்தால், இன்ஜினியரிங் படிப்பில் கண்ணை மூடிக்கொண்டு சேரும் மாணவர்களின் அதிகரிப்பால், 1997ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன. Continue reading ““இன்ஜினியரிங்” மட்டுமே படிப்பா?”

திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமங்கள்..!

திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமங்கள்

நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது.

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! Continue reading “திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமங்கள்..!”