வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல..!

“வறுமை எப்போதும் முன்னேற்றத்திற்கு தடையல்ல”

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய இந்தியாவின் எதிர் காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.

ஒவ்வொரு தாய், தந்தையும் தங்களுடைய குழந்தைகளிடம், தங்கள் உயிரினும் மேலாக பாசம் செலுத்துகின்றனர். அவனை வளர்ப்பதில், தங்கள் நேரம், பணம், உழைப்பு, பாசம் அனைத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள்.

தன்னைவிட தன் மகன் அல்லது மகள், அவர்களது வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள்.

பெற்றோர்கள் ஒரு சாதாரண பள்ளியில்தான் படித்திருப்பார்கள்.. ஆனால் இன்று தங்களது மகனை ஒரு ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் (Convent) படிக்க வைப்பார்கள்.
அவர்களுக்கு அணிய நல்ல உடைகள் கூட இருக்காது. இருப்பினும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல உடையும், உணவும் எப்படியாவது கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

தங்களது கவலைகளையும், பிரச்சினைகளையும், மக்களின் மனத்தில் பதிய வைக்காமல், அவனாவது, அவளாவது நன்றாக படித்து முன்னேறட்டும் என்றே துடிக்கிறார்கள்! பெற்றோர்களின் உழைப்பில், ஆதரவில் வளர்ந்த இளைஞர்களாகிய நாம், அவர்களுடைய அருமையைப் பற்றி அறிந்து மதிப்புக் கொடுக்கிறோமா? இல்லை!

அவர்களின் கனவுகளையும், ஏக்கங்களையும் நிறைவேற்ற வேண்டியது நமது கடமையல்லவா?

இருபது வயதை அடைந்ததும் உனக்கென ஒரு லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உன்னுடைய சொந்த எதிர்காலத்தைப் பற்றிய முடிவுக்கு நீதான் வரவேண்டும்.

சச்சின் டெண்டுல்கர்

(இன்று இந்திய தேசத்தின் உயரியதொரு விருதான பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கும் சச்சின் டெண்டுல்கர். இவரின் அயராத உழைப்பும், குறிக்கோளும், பாரத ரத்னா விருது வழங்கும் விதிமுறைகளையே சற்று மாற்றி அமைக்கும் அளவிற்கு இவரது சாதனைகள் தொடர்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய துறையில் சாதிக்க முடியும். )

துப்பாக்கி சுடப் பழகுபவன் ஒரு குறியை(aim) வைத்தே பழகுவான்! குறியில்லாமல் அவன் இஷ்டப்படி சுட்டால் என்ன ஆகும்? இலக்கே மாறிவிடும். அவனுக்கே ஆபத்துகள் வந்துவிடும் அல்லவா?

இருபது வயது முதல் முப்பது வயது வரை உள்ள ஆண்டுகளே உன்னுடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடும் காலகட்டமாகும். இந்த கால கட்டத்தில் நீ மட்டும் சரியாக ஒரு அடிப்படையை அமைக்கவில்லையெனில் உனது பிற்கால வாழ்வே வீணாகிவிடும்.

ஏனெனில் ஒருவன் 30 வயதுக்கு மேல்தான் தன்னுடைய வாழ்க்கை கட்டிடத்தைக் கட்ட

இசைத்துறையில் – ஏ.ஆர். ரஹ்மான்

ஆரம்பிக்கிறான். இந்த இளமைப்பருவத்தில் விளையாட்டும். நண்பரும் மிகவும் வேண்டியவைதான். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவைகளை ஒதுக்கி விடவும் வேண்டும்.

நிகழ்காலத்தைவிட உனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றியே எப்போதும் மனத்தில் நினைக்க வேண்டும்!

“விதை நெல்லை ஒருவன் சமைத்து சாப்பிட்டு விட்டால் பின்பு எங்ஙனம் தனது நிலத்தில் விதையை விதைத்து அறுவடை செய்ய முடியும்? என்பதை எப்போதும் உன் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிறந்த திறமைசாலிகளான எத்தனையோ இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை காதல், கும்மாளம், டான்ஸ், குடிப்பழக்கம், விளையாட்டு என்று, அளவிற்குமேல் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை, அவர்களே அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

சிறுவயதில் தைத்த உன்னுடைய சட்டையைவிட உடல் எவ்வாறு வளர்ந்துள்ளதோ, அவ்வாறே தற்போதைய வேலைக்கு வேண்டியதைவிட உன்னுடைய திறமையையும் உழைப்பும் அதிகமாக இருக்க வேண்டும்.

எப்போதும் உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையைவிட சற்று அதிகமாக செய்தீர்கள் என்றால் அதுவே உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கடின உழைப்பில் முன்னேறியவர்கள் உலகில் எத்தனையோ பேர்.. ஓர் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக சேர்ந்து பிறகு அந்நிறவனத்திற்கு முதலாளி ஆகியவர்களும் இருக்கிறார்கள். காரணம் சரியான குறிக்கோளும், கடினமான உழைப்பும் தான்.

இங்கே ஒர் வறுமை சிகரமாயிருக்கிறது..!!!

அணு விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

எனவே அன்பு நண்பர்களே.. !

வறுமை எப்போதும் முன்னேற்றத்திற்கு தடையல்ல.. ! உங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையே அல்ல…!! உணர்வீர்கள்..! சிந்தித்து செயல்படுவீர்கள்..!!

இப்பகுதியைப் பற்றிய தங்களது கருத்தையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம்.. மீண்டும் மற்றுமொரு நன்மைமிகு பதினூடே சந்திப்போம்.. நன்றி நண்பர்களே..!!!

நன்றி : தங்கம்பழனி

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s