சவூதியில் வேலை மாறுகிறீர்களா? நான்கு நிபந்தனைகள்!

4 conditions for job transfer in KSA

அரபு நியூஸ் (Arabnews.com) இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் படி,

சவூதி அரேபியாவில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, நிதாக்கத் என்னும் திட்டத்தை சவூதி அரசு முன்னெடுத்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட அளவு சவூதிக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கிரீன் எனப்படும் பச்சைத் தரம் கிடைக்கும்.

அப்படி ‘பச்சை‘ சமிக்ஞை கிடைக்கப்பெற்ற நிறுவனங்கள் மட்டுமே விசா பெறுவது போன்ற அரசு உதவிகளைப் பெற முடியும்.

அதில் ‘மஞ்சள்’ அட்டை கிடைத்த நிறுவனங்கள் உரிய விதிகளை உரிய காலத்திற்குள் கடைபிடித்தாக வேண்டும் என்ற எச்சரிக்கை பெற்றதாக பொருள். மேலும் சிகப்பு வர்ணம் (ரெட்) பெற்றிருந்தால் அந்த நிறுவனம் எவ்வித அரசு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் என்று பொருளாகும்.

இதைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் ‘பச்சை‘ நிற நிறுவனங்களாகப் பார்த்து மாறத் தலைப்பட்டுள்ளனர்,இந்நிலையில், நிறுவனத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு நான்கு நிபந்தனைகளை சவூதி தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

1). சவூதியில் குறைந்தபட்சம் ஆறுவருடங்களேனும் இருப்பவர்களே, வேலை மாற்றம் பெற முடியும்

2). எந்த நிறுவனத்திலிருந்து மாற விரும்புகிறீர்களோ, அங்கே குறைந்தபட்சம் இரண்டு வருடங்களேனும் பணி செய்திருக்க வேண்டும்

3). வொர்க் பெர்மிட் எனப்படும் பணியனுமதியட்டை காலாவதி ஆனபிறகே மாற்றம் சாத்தியம்

4). மஞ்சள் மற்றும் சிகப்பு வர்ணம் பெற்ற நிறுவனங்களிலிருந்து மாற விரும்புபவர்கள் பச்சை வர்ண நிறுவனங்களுக்கே மாற இயலும்

தகவல்: ஜாஹிர் ஹூசைன் | நன்றி:இந்நேரம்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s