குழந்தைகளை விளையாட விடுங்க! உடல் ஆரோக்கியமாகும்!

குழந்தைகளை விளையாட விடுங்க!

பள்ளிக்கு சென்று வருவதை தவிர்த்து இன்றைக்கு குழந்தைகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பதும், கணினியில் கேம் விளையாடுவதும்தான். இதனால் குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் என்பது தற்போது அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இளம் வயதினரிடையே உடற்பயிற்சி என்ற ஒன்று இல்லாமயே அவர்களின் உடல் பருமன் அடைவதற்கு காரணம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஓடி ஆடி விளையாடட்டும்

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வயது முதல் 5 வயது வரையிலான சுமார் 244 குழந்தைளிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் குழந்தைகளின் அன்றாட உடற்பயிற்சியானது இந்த கால கட்டத்தில் உள்ள குழந்தைகளிடம் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் தொலைக்காட்சி முன் அமர்தல் அல்லது அசையாமல் ஓரிடத்தில் சுறுசுறுப்பின்றி அமர்ந்திருப்பது ஒரே அளவில் நீடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகமாக டிவி பார்த்தல்

நாளொன்றுக்கு 90 நிமிட நேரத்தை டி.வி அல்லது கம்ப்யூட்டர் முன்பு அவர்கள் செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் படித்தல், படம் வரைதல் போன்ற அசையாமல் செலவிடும் நேரம் 90 நிமிடம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இதன் காரணமாக 3 முதல் 5 வயதுடைய குழந்தைகளிடத்தில் உடல் பருமன் பிரச்சினை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தல் அவசியம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி மற்றும் கணினியில் அவர்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்தி, உடல் ரீதியில் சுறுசுறுப்பாக இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

என்னென்ன விளையாட்டுகள்

உடற்பயிற்சி என்றதும் ஜிம்மிற்கு அழைத்துப்போய் விடுவதல்ல குழந்தைகளை நன்றாக ஓடி ஆடி உற்சாகமாக செயல்பட வைத்தாலே அவர்களுக்கு தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட்டு விடும் உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு நடனமாடுவது விருப்பம் எனில் அவர்களை வீட்டில் நடனமாட வைத்து அழகு பார்க்கலாம். இது அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும், அதோடு சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கும்.

அதேபோல் குழந்தைகளுக்கு வாலிபால், ஃபுட்பால், நீச்சல், ஹாக்கி, பேட்மிட்டன் இவற்றில் ஏதாவது ஆர்வம் இருக்கும் பட்சத்தில் 7 வயதிற்கு மேல் அவர்களை இந்த விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி அளிக்கலாம்.

நடை பயிற்சி

பெற்றோர்கள் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ளும் போது குழந்தைகளையும் கூட்டிச்செல்லலாம். அதிகாலை நடை பயிற்சி அனைவருக்குமே நல்லது. அதேபோல் கேரம்போர்டு, செஸ், போன்றவை குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும். இதுபோன்ற விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி அவர்களை விளையாட வைக்கலாம்.

வீட்டு வேலைகள்

7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை சின்ன வீட்டு வேலைகளைச் செய்ய பழக்கப்படுத்தலாம். ஐந்து வயதிலேயே அவற்றிர்க்கு பொறுப்பான வேலைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வார்கள். அறையை சுத்தமாக வைத்துக்கொள்வது, தன்னுடைய புத்தகங்களை அடுக்கி வைத்தல் போன்றவைகளை கற்றுக்கொடுக்கலாம். இதுவே சிறந்த உடற்பயிற்சிதான்.

“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா”

நன்றி : tamil.boldsky

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s