சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையை நோக்கி மனித இனம்..!

ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

– Dr.எம்.கே.முருகானந்தன்

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான். முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.

ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் (Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும். Read the rest of this entry »

வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல..!

“வறுமை எப்போதும் முன்னேற்றத்திற்கு தடையல்ல”

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய இந்தியாவின் எதிர் காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.

ஒவ்வொரு தாய், தந்தையும் தங்களுடைய குழந்தைகளிடம், தங்கள் உயிரினும் மேலாக பாசம் செலுத்துகின்றனர். அவனை வளர்ப்பதில், தங்கள் நேரம், பணம், உழைப்பு, பாசம் அனைத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள்.

தன்னைவிட தன் மகன் அல்லது மகள், அவர்களது வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். Read the rest of this entry »

சாதி வாரியாக கணக்கெடுப்பு : முஸ்லிம்கள் தங்களை “இஸ்லாம்” என்று குறிப்பிட வேண்டும்: இ. யூ. முஸ்லிம் லீக் அறிவுறுத்தல்

"சாதி வாரியாக கணக்கெடுப்பு"

தமிழகம் முழுவதும் நடந்து வரும் சாதிவாரியாக கணக் கெடுப்பில் முஸ்லிம் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதி பிரிவுகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் “இஸ்லாம்” என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய். ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், Read the rest of this entry »

“எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் : மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள்”

நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள்

ஆங்கில ஏடு ஒன்றில் வெளிவந்த விளம்பரத்தை யொட்டிய ஓர் கதை; இது பழைய காலத்துக் கதை என்ற அறிமுகத்துடன் தொடங்குகிறது.

ஒருவருக்கு இரண்டு மனைவிகள்; அவர்களில் மூத்தவர் கணவனையொத்து சற்றுக் குறைந்த வயதினர் – மற்றொரு மனைவி இளைய வயதுடையவர்.

ஆண்டுகள் ஆக, ஆக, கணவருக்குத் தலை முடி வெளுக்க ஆரம்பித்தது – இயற்கைதானே! அவருடைய இளையதாரத்திற்கோ இவரைத் தன் கணவர் என்று சொல்லிக் கொண்டால் – இவர் கிழவர் என்பதுபோல தோற்றத்தில் தெரிந்து விடுவாரே என்று கருதி, இவர் தம் தலைமுடியில் எவை எவையெல்லாம் வெளுத்தவையோ அவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளாகப் பிடுங்கி விடும் பழக்கத்தினைக் கையாண்டாராம்! Read the rest of this entry »

%d bloggers like this: