யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

தூக்கம் எப்பொழுதுமே உடலுக்கு எனர்ஜியை அளிக்க வல்லது. அதாவது தூக்கம் உடலுக்கு சக்தி வழங்குவதில் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றாகத் தூங்கி எழுந்தாலே உடம்பு ரொம்ப பிரெஷ்சாக ரீசார்ஜ் பண்ணியதுபோல் ஆகிவிடுகிறது என்று சிலர் சொல்வதுண்டு. மனிதனின் தூக்கத் தேவை இருக்கிறதே, அது வயதுக்கு வயது வித்தியாசப்படும். அதே மாதிரி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.

பகலில் தூங்காமல் இரவு மட்டும் தூங்கினால் அந்தத் தூக்கம் ஓரளவு போதுமானதாகவே இருக்கும். பகலில் தூங்குகிறவர்களுக்கு இரவில் அதிகமாக தூங்கிய திருப்தி இருக்காது. சாதாரணமாக உடலில் உள்ள உஷ்ணத்தை விட கொஞ்சம் குறைவான உஷ்ணத்தோடு ஒரு மனிதன் தொடர்ந்து சுமார் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். பிறந்த குழந்தைகள் பதினெட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

கண்டிப்பாக தூங்கும். நீங்கள் உங்கள் வீட்டிலேயே பார்த்திருக்கலாம். ஒரு வயது ஆகும் வரை குழந்தைகள் சுமார் 14-லிருந்து 18 மணி நேரம் வரை தூங்கும். ஒன்றிலிருந்து மூன்று வயது வரை சுமார் 12 மணியில் இருந்து 15 மணி நேரம் வரை தூங்கும். மூன்றிலிருந்து ஐந்து வயது வரை சுமார் 11 மணியில் இருந்து 13 மணி நேரம் வரை தூங்கும். 5 வயதில் இருந்து 12 வயது வரை சுமார் 9 மணியில் இருந்து 11 மணி நேரம் வரை தூங்கும். பதினாறு வயதை அடையும் பருவத்தில் சுமார் 9-ல் இருந்து 10 மணி நேரம் வரை தூங்குவார்கள்.

பெரிய மனிதர்கள் எல்லோருமே சுமார் 7-ல் இருந்து 8 மணி நேரம் வரை தூங்குவார்கள். கர்ப்பிணி பெண்கள் சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவார்கள். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் தூங்கும் நேரம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். வவ்வால் சுமார் 19 மணி நேரம் தூங்கும். மலைப்பாம்பு சுமார் 17 மணி நேரம் தூங்கும். பிறந்த குழந்தையைப் போலவே புலியும் சுமார் 16 மணி நேரம் தூங்கும். அணில் சுமார் 15 மணி நேரம் தூங்கும்.

சிங்கம் சுமார் 13 மணி நேரம் தூங்கும். ஆண் சிங்கத்தை விட பெண் சிங்கம் ரொம்ப நேரம் தூங்கும். ஏனெனில் அதற்கு ரெஸ்ட் அதிகம் தேவை. ஏனென்றால் இரையைத் தேடி ஓடி வேட்டையாடி கொண்டு வந்து சேர்ப்பது பெண் சிங்கம் தானே. நாய், சுமார் 10 மணி நேரம் தூங்கும். பன்றி சுமார் 8 மணி நேரம் தூங்கும். பசுமாடு, ஆடு, ஆசிய யானைகள் சுமார் 4 மணி நேரம் தூங்கும். கழுதை, குதிரை, ஆப்பிரிக்க யானைகள் சுமார் 3 மணி நேரம் தூங்கும்.

முக்கால்வாசி வாழ்க்கையை பூனை தூக்கத்திலேயே செலவழித்து விடும். தூக்கம் எப்படி ஏற்படுகிறது. ஒழுங்காக தூங்கா விட்டால் உடலுக்கு என்ன கெடுதி ஏற்படும் என்று இனி பார்ப்போம். தூக்கம் இயற்கையானது, இனிமையானது. தூக்கக் கிறக்கத்திலிருக்கும் ஒருவரிடம் `ஒரு கோடி ரூபாய் தருகிறேன், நீ தூங்கக்கூடாது என்று சொன்னால் `அய்யா சாமி ஆளை விடுங்க.

எனக்கு ஒரு கோடி ரூபாயும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுங்க. அதுவே போதும் என்று தான் சொல்வார். அந்த அளவுக்கு தூங்குவதில் சந்தோஷமும் சுகமும் இருக்கிறது. தூக்கத்தின் பல்வேறு நிலைகளை கண்டுபிடிப்பதற்கும், கணக்கிடுவதற்கும் இ.இ.ஜி., இ.டி.ஜி., இ.எம்.ஜி. ஆகிய மூன்று டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன.

இதில் இ.இ.ஜி என்பது மூளையின் செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது, இ.டி.ஜி. என்பது தூங்கும்போது கண்களின் அசைவைக் கண்டுபிடிப்பது, இ.எம்.ஜி. என்பது உடலிலுள்ள தசைகளின் செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது. தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவரின் வயதையும், அவருடைய தனித்தன்மையையும் பொறுத்து தூங்கும் நேரம் மாறுபடும்.

கொஞ்ச நேரம் தூங்கினாலே போதும் என்று சிலர் நினைப்பதுண்டு. இந்தக் குறைவான நேர தூக்கம் போதுமா, போதாதா என்று எப்படி முடிவு பண்ணுவது? ஒருவர் குறைவான நேரம் தூங்கினாலும், தேக ஆரோக்கியத்தோடு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறாரென்றால் அவருக்கு குறைவான நேர தூக்கம்போதும் என்று ஒத்துக்கொள்ளலாம்.

ஆனால் தேக ஆரோக்கியம் சரியில்லை, உடம்பில் பல பிரச்சினைகள் உண்டாகிறது என்றால் அவருக்கு குறைவான நேர தூக்கம் போதவில்லை என்றுதான் அர்த்தம். இரவுப் பணிகளில் இருப்பவர்களுக்கு பகலில் நன்றாகத் தூங்கினால் தான் ஓரளவு நிம்மதியாக இருக்கும். சிலருக்கு அவர்கள் பார்க்கும் வேலையைப் பொறுத்து இரவில் சுத்தமாக தூங்க முடியாமல் போய் விடுகிறது.

அதிக நேரம் தூங்குவதற்கு நிறைய விஷயங்கள் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. தேகப்பயிற்சியும், சத்தாண உணவும் எப்படி ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழத் தேவையோ, அதுபோல நல்ல தூக்கமும் ஒரு மனிதன் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கண்டிப்பாக தேவை.

Source : melathirupanthuruthi / THUKKACHI HAJA

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s