“யோகாவின் மூலம் உடல் மற்றும் மன நோய்களை எளிதில் தீர்க்கலாம்”

யோகாசனம்

எறத்தாள 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும்.

யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர்.

யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். 

யோகப் பயிற்சியின் சிறப்புகள்:

  • இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சின என்னனு கேட்கிற நிலமைக்கு நம்ம வந்தாச்சி அதனால் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும். ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
  • தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.
  • உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
  • சாதராணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்குத் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
  • நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை பு¡¢கிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந் தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச் சியோடு இருக்கலாம்.

பல யோகாசனங்கள் இருந்தாலும் சில முக்கியமானதை மட்டும் இங்கு காண்போம் . யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும் உள்ளுறுப்புகள்தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன.

பத்மாசனம்

பத்மாசனம்

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகா நிமிர்ந்து உட்காரவும். நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.

பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்கபடும், கூன் முதுகுசரியாகும், உடலில் சுறு சுறுப்பு உண்டாகும்.

தணுராசனம்

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற் சியை செய்ய லாம்.
பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.

பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.

சிரசாசனம்

சிரசாசனம்

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கண்டிப்பாக செய்யகூடாது.

பயன்கள்: தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல் லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப் பாகும்.

வஜ்ராசனம் :

வஜ்ராசனம்

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.

பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமா குதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

விபரீதகரணி

விபரீதகரணி

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்க வாட்டில் இறுகப்பிடித்து கொள்ள வேண்டும்.

பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்ககூடாது.
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.

பச்சிமோத்தாசனம்

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கை விரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ள வேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

மேற்கண்ட யோகாசனத்தில் ஏதானும் சந்தேகம் இருப்பின் தெரிந்தவரிடம் முறையாக கற்றுக்கொள்வதே மிகவும் நல்லது.  // உதவி : ungalblog

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s