வாங்க…மனித மூளை…தெரிந்துகொள்வோம்

"மனித மூளை"

1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.

2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது.

3. உங்கள் மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், உங்கள் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.

4. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது, ஒரு சிறிய அளவிலான மின் விளக்கை எரிய வைக்க போதுமானது. (அதனாலும் தான் மனித மூளையில் பல்ப் எரிவது போல காட்டுகின்றார்களோ 🙂 Continue reading “வாங்க…மனித மூளை…தெரிந்துகொள்வோம்”

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி – அம்மாபட்டிணம்

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும், கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே,

அல்லாஹ்வின் பேரருளால்…

சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.

இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட இந்தச் சிறப்புமிகு முயற்சியில் நீங்களும் கரம் கோத்து, இறைவனுடைய அருளைப் பெறலாம். Continue reading “அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி – அம்மாபட்டிணம்”

APPENDICITIS(குடல்வால்) குணமாக எளிய மருத்துவம்

குடல்வால்(APPENDICITIS)

சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும். Continue reading “APPENDICITIS(குடல்வால்) குணமாக எளிய மருத்துவம்”

உங்கள் நட்பை உரசிப் பார்க்க…

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்

ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்” – ஆங்கிலப் பழமொழி.

அன்பாக இரு” அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.

இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். ‘உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம். Continue reading “உங்கள் நட்பை உரசிப் பார்க்க…”

“நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும்”

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன். Continue reading ““நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும்””