நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன்

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.

அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது. Continue reading “நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன்”

அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!

உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தை இருக்கிறார்களா…?
அதுவும் சுமாராக தான் படிக்கிறார்களா..?

அப்போ கண்டிப்பாக இந்த ஆக்கம் பயன்படும்… அவர்களுக்கு இல்லை… பெற்றோர்களான உங்களுக்கு..!

“தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்..!”
-நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்
[நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)]

நம்மில் பலருக்கும், ஏன் அனைவருக்குமே தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும்., அதனடிப்படையில் நல்ல வேலை வாய்ப்பு, வசதிப்பெற்று சமூகத்தில் வாழவேண்டும் என்பது தான் தம்மோடு கலந்து விட்ட இறந்த காலம் தொடங்கி எதிர்காலத்திலும் நீடிக்கும் கனவாக இருந்தது -இருக்கிறது!.

குறைந்த பட்சம் தான் படித்த அளவைக்காட்டிலும் சற்றுக்கூடுதலாக தம் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றது.

ஆக பிள்ளைகளின் எதிர்க்காலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் கல்விக்காக தங்களின் நிகழ்காலத்தை பொருளாரதாரரீதியாகவும் – உடலியல் செய்கைரீதியாகவும் பெற்றோர்கள் செலவழிக்கிறார்கள். Continue reading “அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!”

தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

நாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – எல்லாம் எந்தக் கடையில் கிடைக்குமென்று நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் கடையில் கிடைக்குமா? – என்பது ஒரு அருமையான கேள்வியாக இருந்தாலும் “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்னும் வள்ளலாரின் ஆதங்கம் மறுபுறம் நம்மை உலுக்காமலில்லை.

தேடுவோர் ஒருபுறமும் – வைத்துக்கொண்டு காத்திருப்போர் மறுபுறமுமாய் இருக்க எப்போதும் இடைவெளி மட்டும் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது. விளைவு?

ஆங்காங்கே புலம்பல், கலக்கம், மயக்கம், தயக்கம், குழப்பம், விரக்தி…! சரி இவற்றால் பாதிக்கப்படாமல் நாம் நம் வாழ்க்கைத் தோணியைச் செலுத்த வேண்டுமென்றால் முதல் முதலாக “நாம் என்ன செய்ய வேண்டும் – என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் படைப்பு. Continue reading “தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!”

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க 6 மாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 புதிய விதிகளின் படி வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை .இச்சட்டம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.

மேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. Continue reading “ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க 6 மாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை”

மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்

திலிப் குமாராக இருந்த ஓர் இளைஞன் இஸ்லாத்தை தழுவி ஏ.ஆர். ரஹ்மானாக மாறி உலக புகழ் பெற்றது குறித்தும் இஸ்லாத்தை ஏற்ற சூழல் குறித்தும் மனம் திறந்து அளித்த பேட்டி.

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.

அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம். Continue reading “மறுமை பயம் என்னை தூய மனிதனாக மாற்றுகிறது. A.R.ரஹ்மான்”