நட்பின் இலக்கணம்

அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகு மீதியிருக்கும் சாப்பாட்டை ஓரமாக உள்ள வேப்பமரத்தின் அடியில் வைப்பார்கள். வேப்பமரத்தில் எப்போதும் அணில்களும், குருவிகளும் நிறைந்திருக்கும்.

அந்த உணவைச் சாப்பிடுவதற்கென்றே சிட்டுக் குருவிக் கூட்டம் காத்திருக்கும்.

சாப்பாட்டை வைத்ததுதான் தாமதம், சிட்டுக் குருவிகள் பறந்து கீழே வந்து உண்ணத் தொடங்கிவிடும். அதன்பிறகு அணில்கள் கீழிறங்கி வந்து சாப்பிடும்.

சிட்டுக் குருவிகள் பத்துக்கு மேல் இருக்கும். அணில்கள் நான்கு ஐந்துதான் இருக்கும். அணில்களும் குருவிகளும் போட்டிபோட்டு சாப்பிட்டாலும் அவை சண்டை போட்டுக் கொண்டது கிடையாது.

திடீரென்று அங்கே வந்த ஒரு பூனை, இந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டது. அதற்கு, உணவைத் தின்று கொண்டிருக்கும் அணில்களைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. `அணில் கறி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது. சாப்பிட்டால் என்ன ருசியா இருக்கும்! இவை இருக்கும் சைசுக்கு ஒன்று சாப்பிட்டாலே போதும்’ என்று நினைத்தது.

அணிலும், குருவியும் சாப்பிடும்போது மனிதர்கள் யாரும் துரத்துவதில்லை. அவை எந்தவிதத் தொந்தரவுக்கும் ஆளாவதில்லை என்பதால் அக்கம்பக்கம் பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

பாய்ந்தது பூனை…

எதேச்சையாகப் பூனையைக் கவனித்துவிட்ட சிட்டுக் குருவி ஒன்று பறந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. மற்ற குருவிகளும் ஆபத்தை உணர்ந்து கொண்டு பறந்தன. அணில்கள் உடனடியாக பாய்ந்து மரத்தில் ஓடி ஏறிவிட்டன.

பாய்ந்து வந்த பூனை ஏமாந்துபோய் நின்றது. அன்றிலிருந்து தினமும் பூனை, அணில்களை துரத்த ஆரம்பித்தது. அணில்களும், சிட்டுக்குருவிகளும் நல்ல நண்பர்களாக இருக்கவே, ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொண்டு தப்பித்துக் கொண்டன.

அணில்களை உண்ண முடியவில்லையே என்று வருந்திய பூனை திட்டம் போட்டது. அணில்- குருவிகளின் நட்பைப் பிரித்தால்தான் அது நிறைவேறும் என்று முடிவு செய்தது. அணில்கள் தனியாக மரத்தில் இருந்தபோது அவற்றை பூனை சந்தித்தது.

பூனையைப் பார்த்ததும் அணில்கள் கத்த ஆரம்பித்தன.

“நண்பர்களே… என்னைப் பார்த்து ஏன் பயந்து கத்துகிறீர்கள்?”

பூனையின் அமைதியான பேச்சைக் கேட்டு அணில்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன.

“நண்பர்களே… நான் உங்களுக்கு விரோதியில்லை. உங்களுக்கு உதவவே வந்திருக்கிறேன்.”

“எங்களுக்கு நீ எப்படி உதவி செய்ய முடியும்?” தலைவர் அணில் கேட்டது.

“அங்கே மீதியாக வைக்கப்படும் மதிய சாப்பாட்டை நீங்களும், குருவிகளும் சாப்பிடுகிறீர்கள். குருவிகள் எண்ணிக்கையில் அதிகம். நீங்கள் மிகக் குறைவு. அதோடல்லாமல் நீங்கள் மரத்தில் இருந்து இறங்கி வருவதற்குள் குருவிகள் பறந்து வந்து உண்ணத் தொடங்கி விடுகின்றன. மீதி உள்ளதைத்தான் நீங்கள் தின்கிறீர்கள். அதையும் நீங்கள் சாப்பிடும்போது பங்கு போட்டு உங்களுடன் சாப்பிடுகின்றன. இதுதான் நட்புக்கு அடையாளமா? அதனால்தான் அவற்றைத் துரத்திவிட்டு உங்களை உண்ண ஏற்பாடு செய்கின்றேன். அதை புரிந்து கொள்ளாமல் என்னைப் பார்த்ததும் ஓடிவி டுகிறீர்கள்” என்று சாமர்த்தியமாகப் பேசியது பூனை.

அணில்கள் யோசித்தன. `இவன் நமக்கு எதிரியாயிற்றே? இருந்தாலும் பூனை சொல்வது சரி’ என அவற்றுக்குத் தோன்றியது. தலைவர் அணில், “பூனை நண்பா! நாங்கள் நாளை அதற்கு ஒரு வழி செய்கிறோம். உன் உதவி தேவைப்பட்டால் அழைக்கிறோம்” என்றது.

மறுநாள் மதிய சாப்பாட்டு வேளையில் வேண்டுமென்றே அணில்கள் குருவிகள் மீது மோதி மோதிச் சாப்பிட்டன. சிட்டுக்குருவி கூட்டத் தலைவன் என்றும் இல்லாமல் அணிகல்கள் அப்படி செய்வதைப் பார்த்து, “நண்பர்களே, இன்று உங்களுக்கு என்ன வந்தது? ஏன் இப்படி மோதுகிறீர்கள்?” என்று கேட்டது.

“நீங்கள் தினம் எங்களை ஏமாற்றிச் சாப்பிட்டுவிட்டுப் போவீர்கள்! நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?” என்றது அணில் தலைவன்.

குருவிகளின் தலைவன் யோசித்தது. இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அவசரப்படக் கூடாது என்று முடிவு செய்துகொண்டது. பிறகு தன் கூட்டத்தாருடன் பறந்துபோய் மரக்கிளையில் அமர்ந்தது.

இவற்றை பூனை தூரத்தில் இருந்து பார்த்தது. அணில்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன.

மறுநாள் மதிய சாப்பாடு வைக்கப்பட்டதும் சிட்டுக் குருவிகள் தமது தலைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மரத்திலேயே அமர்ந்திருந்தன. அணில்கள் வந்து விறு
விறுவென்று சாப்பிட ஆரம்பித்தன.

குருவி தலைவன் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதேபோல பூனை தலை தெரிய ஆரம்பித்தது. பிறகு முழு உருவம் தெரிந்தது. குருவிகள் இல்லாமல் அணில்கள் மட்டும் உணவு உண்பதைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்தது.

அதை கவனித்துவிட்ட குருவி தலைவன் கத்த ஆரம்பித்துவிட்டது. மற்றக் குருவிகளும் `ஆபத்து, ஆபத்து’ என்று சேர்ந்து கத்தின. அணில்கள் கவலைப்படாமல் சாப்பிட்டன.

சிட்டுக்குருவி தலைவன் மனம் பொறுக்காமல் அணில்களிடம் சொன்னது. “நண்பர்களே, இதில் சதி இருக்கிறது! ஏமாறாதீர்கள். நாங்கள் இனி உணவே உட்கொள்ள வரவில்லை. நீங்கள் உயிர் வாழ்ந்தால் போதும்” என்றது.

குருவி தலைவனின் உருக்கமான குரலைக் கேட்டுத் தமது தவறை உணர்ந்த அணில்கள் ஓடவும், பூனை ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது. குறி தவறித் தடுமாறி விழுந்தது. மரத்தில் ஏறி உயிர் தப்பிய அணில்களுக்கு அப்போதுதான் உறைத்தது. `நாம் மதியீனத்தில் இருந்தோம், குருவி நண்பர்கள் இல்லாவிட்டால் உயிரை இழந்திருப்போமே’ என்று எல்லா அணில்களும் நினைத்து வருந்தின.

குருவி தலைவன் சொன்னது, “நண்பர்களே… நமக்குள் கோபமிருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு உங்களைப் பழிவாங்க நினைத்து நாங்கள் பேசாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆபத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்ல நட்புக்கு அழகல்லவே?”

நெகிழ்ந்துபோன அணில்களின் தலைவன், தனது தவறுக்கு வருந்தி சிட்டுக் குருவிகளிடம் மன்னிப்புக் கோரியது.

– தமிழ் நண்பர்கள்

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s