2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்

2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள் (கற்பனை)

முன்னாள் மத்திய மந்திரி ராசாவின் மகன் 12 G ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள 2 பாதாள ரகசிய அறைகள் திறப்பு அதில் உள்ள தங்க வைர நகைகளை மதிப்பிட அதிகாரிகள் திணறல். மற்ற அறைகளை திறக்க உயர் நீதி மன்றம் தடை விதிப்பு.

பாகிஸ்தான் திவிரவாதி கசாப் மாரடைப்பில் மரணம். காரணம் அவருக்கு அதிக அளவு பிரியாணி உணவாக வழங்கப்பட்டதே காரணம்.

ஜெயலலிதா அவரின் உத்தரவு படி கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து பாலங்களும் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக சுரங்கபாதை அமைக்கப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டன.

வேட்பாளர்களின் விமானத்திற்கு பின்னால் ஐந்து விமானங்கள் மட்டுமே பறக்க வேண்டும் இந்திய தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

தமிழகத்தில் தமிழருக்கு வாழ இடம் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கண்ணிர் விட்டு அழுதவாறு வைகோ அறிவிப்பு.

பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்ட சாரயத்தில் கலப்படம், மாணவர்கள் 100 பேர் சாவு.

மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஜெயலலிதா விமானத்திற்கு பின் 200 விமானங்கள் பறந்து சென்றன.

திமுக தலைவர் ஸ்டாலினும், பொது செயலாளர் அழகிரியும் மகளிர் அணித்தலைவி கனிமொழியும், கொள்கை பரப்பு செயலாளர் வடிவேலும் முப்பெறும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உண்டியல் குலுக்கும் முறை ஒழிப்பு அதற்கு பதிலாக இணையத்தின் வழியாக பேபால் மூலம் பணம் வசூலிக்க முடிவு.

முன்னாள் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் விருத்தாசலத்தில் உள்ள குக்கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்க இடம் ஒதுக்குமாறு எல்லா கட்சிகளுடன் ரகசிய பேச்சு வார்த்தை.

ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடிக்க அனுஷ்கா என்ற நடிகையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது..

கலைஞரின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. அதிலாவது முதலமைச்சர் வேடத்தில் நடிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க சந்திரசேகர் வேண்டுகோள்..

முதியோர் இல்ல வாசலில் ரெமி மார்டினை குடித்து விட்டு பாட்டிகளை கிண்டல் செய்து வம்புக்கிழுத்த சாருவுக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்.

கற்பனை, சிரிக்க மட்டுமே… Avargal-Unmaigal.

Advertisements

One thought on “2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்

  1. Jeeva May 8, 2015 / 12:02 am

    கண்டிப்பா

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s