வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?

அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார். Continue reading “வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!”

2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்

2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள் (கற்பனை)

முன்னாள் மத்திய மந்திரி ராசாவின் மகன் 12 G ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள 2 பாதாள ரகசிய அறைகள் திறப்பு அதில் உள்ள தங்க வைர நகைகளை மதிப்பிட அதிகாரிகள் திணறல். மற்ற அறைகளை திறக்க உயர் நீதி மன்றம் தடை விதிப்பு.

பாகிஸ்தான் திவிரவாதி கசாப் மாரடைப்பில் மரணம். காரணம் அவருக்கு அதிக அளவு பிரியாணி உணவாக வழங்கப்பட்டதே காரணம்.

ஜெயலலிதா அவரின் உத்தரவு படி கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து பாலங்களும் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக சுரங்கபாதை அமைக்கப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டன.

வேட்பாளர்களின் விமானத்திற்கு பின்னால் ஐந்து விமானங்கள் மட்டுமே பறக்க வேண்டும் இந்திய தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

தமிழகத்தில் தமிழருக்கு வாழ இடம் கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கண்ணிர் விட்டு அழுதவாறு வைகோ அறிவிப்பு. Continue reading “2021 – ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய்திகள்”

யார் அந்த மருதநாயகம்?

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.

1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.

காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.

கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்! நீண்டதொரு வரலாறு பொருமையுடன் அறிந்து கொள்வொம்.. Continue reading “யார் அந்த மருதநாயகம்?”