ஃபாரின் ரிட்டன்னின் அலப்பரைகள்..(வெளிநாட்டு ஜொல்ஸ்..)

நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? என்ன செய்வாங்க..அவங்க பண்ற அலப்பரைகள் என்ன..வாங்க கமெடியா ஒரு ஆராய்ச்சி பன்னுவோம்..

கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..) Read the rest of this entry »

பயணத்தின் இடையே…

(சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் நாவலராகவும் ஆலிமாகவும், சிராஜ் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய கடையநல்லூர் மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியாருடன் கிறிஸ்தவ மதம் குறித்து கொண்ட கேள்வி உரையாடல் நம் சிந்தனைக்காக..)

நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக்கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில்என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும் தவழும் களையான முகம். வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். “யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ” என்று எண்ணிக்கொண்டேன்.

புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன்கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப்புகை வண்டி. Read the rest of this entry »

குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்

குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள். ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :

அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19) Read the rest of this entry »

மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?

[ காதலில்லா நெஞ்சம் நிச்சயமாக தேவைகளைப் பெறுவதில் மிகக் கடுமையாக இருக்கும். காதல் கொண்ட நெஞ்சம் மிகையுண்ட காதலால் மற்ற குறைகளை மாற்றி விடும் அல்லது ஏற்றுக் கொண்டுவிடும். எனவே காதல் மணமென்றாலும், பெற்றோர் முடித்த மணமென்றாலும் காதல் நிறைந்திருந்தால் மணவாழ்வு நிறைவு பட நிலைக்கும்.

முதலில் இணைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலவேண்டும். இது ஒரு இணை மற்றவரை கூர்ந்து கவனிப்பதாலேயேதான் உருவாகும். பொதுவாகவே இனக்கவர்ச்சியற்ற காதல் உருவாவது இப்படித்தான். பழகப் பழக மற்றவரிடம் இருக்கும் தனித்தன்மை கொண்ட குணங்களிலிருந்து அவரிடமுள்ள சிறு சிறு அசைவுகள் வரையில் நம்மை கட்டியிழுத்து மயக்கி அவரது நிலையான அருகாமைக்காக வெகுவாக ஏங்க வைக்கும்.]

மண முறிவுகள் ஒருவகையில் மக்களின் மன சுதந்திரத்தினை பறை சாற்றும் ஒரு செயலாக இருந்தாலும் இந்த மண முறிவுகள் தடுக்கப் படவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதே இன்றைய பேச்சு.. Read the rest of this entry »

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது, மிக அதிகமாகச் சாப்பிடுவது,, நிறைய சர்க்கரை சாப்பிடுதல், தூக்கமின்மை……

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. Read the rest of this entry »

%d bloggers like this: