இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (அல்பகரா : வசனம் 110)

மேலும், ‘அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். ” (98:5)

இப்னு உமர் (ரலி) அறிவித்து புகாரீ மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது – அவர்கள் கூறுகின்றார்கள் :

(அடிப்படைகளான) ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, (ஐந்தான) அவற்றிலிருந்து ஜகாத் கொடுப்பதைக் கூறினார்கள். Continue reading “இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்”

அறிஞர்கள் போற்றும் பெருமானார்

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
– ஜவஹர்லால் நேரு –

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
– எஸ். எச். லீடர் – Continue reading “அறிஞர்கள் போற்றும் பெருமானார்”

உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்

அமெரிக்காவின் காவல் துறையை சேர்ந்த டெர்ரி ப்ரூக் இஸ்லாத்தை தழுவிய பின் முதல் முறையாக உம்ராவை நிறைவேற்றினார். சவுதியில் உள்ள முக்கிய நகரமான மதீனாவில் அவர் தன்னுடைய தொழுகையை நிறைவேற்றும் சமயத்தில் சவுதியின் தினப்பத்திரிக்கையான ஒகாஜ் செய்தியாளர்களின் கண்ணில் சிக்கிய அவருக்காக அவர் தன்னுடைய தொழுகை முடிந்து வரும் வரை காத்திருந்து அவரை பேட்டி எடுத்தனர் சவுதியை சேர்ந்த செய்தியாளர்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெர்ரி ப்ரூக் (முஸ்தபா அப்துல்லா) தான் இஸ்லாத்தை தழுவிய அற்புதத்தை பின்வருமாறு நம்முடன் பகிர்ந்து கொண்டார். Continue reading “உம்ராவை நிறைவேற்றிய முன்னால் அமெரிக்க வீரர்”

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி !

மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.
“இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை” என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

லைலத்துல் கத்ர் இரவு..

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, “அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். Continue reading “லைலத்துல் கத்ர் இரவு..”