பழிபோடும் மனப்பான்மை

இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்த ‘கறுப்பு காந்தி காமராஜர்’ ஒரு முறை தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் தேர்தலில் நின்றார். தனது ஊர் என்பதால் மிகுந்த‌ நம்பிக்கையுடன் மற்ற தொகுதிகளுக்குப் பயணம் செய்து கட்சிப் பணி ஆற்றினார். தேர்தலில் ஒரு வரலாறு காணாத முடிவு ஏற்பட்டது. வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தோற்றார். நாடே வியப்பில் ஸ்தம்பித்துப்போயிற்று.

முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் தோற்ற காமராஜருக்கு, அவருடைய உண்மையான நட்புக்கு ராஜாஜீ செலுத்திய மரியாதை…. “கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுதன் தான். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளைக் கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சு அங்கே எவனாவது கொண்டாடினான என்ன….?” எவ்வளவு இழிவுநிலை காமராஜருக்கு… ஆனாலும் தோல்வியால் காமராஜரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் எப்போதும் போலவே இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் செய்திராத ஒரு பிரகடனத்தை காமராஜர் செய்தார். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசைப்பற்றி, ஆறுமாத காலத்திற்கு யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு உத்திரவிட்டார். உலக அரசியல் வரலாற்றில் கூட இத்தகைய நாகரீகம் கொண்டவர்கள் காண்பது அறிது.

‘கறுப்பு காந்தி காமராஜர்’ மட்டுமல்ல! வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபலங்கள் இதுபோலப் பழிபோடுவதை முடிந்தவரையில் தவிர்த்தே வந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, ‘மக்கள் திலகம் எம். ஜி. ஆர்’ அனைத்து திறமைகளையும் பெற்று இருந்தாலும், தன்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காததற்கு யாரையும் குறை சொல்வதையோ, பழிபோடுவதையோ வழக்கமாகக் கொள்ளாதவர். அதனால்தான், தான் நினைத்ததையெல்லாம் நடித்தும், படமெடுத்தும், இயக்குனராகத் திகழ்ந்தும் பரிமளித்தார்.

அதே நேரத்தில் காலத்தின் மீதும், தனது அதிர்ஷ்டத்தின் மீதும் குறை கூறினாரே தவிர மற்றவர்களின் மீது பழிபோடவில்லை. ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையா’ என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டதற்கு, ‘உண்மைதான். அதிர்ஷ்டம் உடன் இருந்திருந்தால் இந்த அளவுக்கு உழைத்திருக்க தேவை இல்லை’ என்று கூறினார்.
அதேசமயம், தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று காலத்தின் மீதும், விதியின் மீதும் பழிபோட்டுவிட்டு சும்மா இருந்துவிடவில்லை. தன் துறையில் அயராது உழைத்தார். ‘நிச்சயம் சாதிப்பேன்’ என்ற எண்ணத்துடன் போராடினார்! வெற்றியும் பெற்றார்!!

பழிபோடும் மனப்பான்மை ஏற்படக் காரணங்கள்:

‘ஏதாவது நடக்காமல் போகாது’ என்ற எதிர்பார்ப்புடன் ஏதும் செய்யாமல் காத்திருப்பது. தன் திறமையைப் பற்றி தனக்கே நம்பிக்கையில்லாமை.

‘அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே’ என்று நடந்தவற்றைக் காரணம் காட்டி ஏதும் செய்யாமல் சும்மா இருப்பது.

தோல்வி ஏற்பட்டவுடன் ‘இனி அவ்வளவுதான்’ என்று மனதுக்குள்ளே நினைத்து சும்மா இருப்பது.

‘மற்றவர்களின் மேல், பிற அம்சங்களின் மேல் பழிபோட்டால், நம் மீது குற்றம் குறை சொல்லமாட்டார்கள்’ என்று நினைப்பது.

‘செய்ததையே மறுபடியும் செய்ய வேண்டுமே’ என்று அலுத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் ‘நாம் செய்ய வேண்டியதை ஒழுங்காகச் செய்யாதது தான்’.

– ஒரு நண்பரின் BLOGலிருந்து (kapsystem Blog)

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: