யாருக்கெல்லாம் சொத்தில் பங்குண்டு?

”இந்த வீட்டில் இதுவரை யாரும் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்ததில்லை. நீ புதிதாக வந்து ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டாம்.” – பாட்டியின் சகோதரர்கள்தான் இப்படிக் கத்தினர்.

இனி இங்கே நின்று ஆகப் போவது ஒன்றும் இல்லை. நடையைக் கட்டினான் அந்த இளைஞன். இது முதல் தடவையல்ல. பல தடவை இப்படி வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறான் அவன்.

அந்த இளைஞன் படும் கஷ்டங்களைக் கண்டு சகிக்க முடியாமல் பாட்டி அவனிடம் இப்படிச் சொன்னாள்: ”என் சகோதரர்கள் எனக்குக் கிடைக்க வேண்டிய சொத்தின் பங்குகளை இதுவரை தரவில்லை. நீ அவர்களிடம் சென்று அதனைக் கேள். அது கிடைத்தால் உன் கஷ்டம் தீரும்.”

அன்றைக்கு ஆரம்பித்த பயணம் இது. வெளியூரிலிருக்கும் அவர்களைக் காண ஒவ்வொரு முறையும் பேருந்தில் செல்வான். பேருந்துக் கட்டணம்தான் நஷ்டமாகுமே தவிர போன காரியம் வெற்றி பெறாது.

போன தடவை வந்தபொழுது இனி இந்தப் பக்கமே வரக்கூடாது என்று தீர்மானித்து விட்டுத்தான் திரும்பினான் அவன். ஆனால் வீட்டில் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் மீண்டும் வரவேண்டியதாயிற்று. பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பது மிகப் பெரிய தவறு என்பது போல் அவர்கள் பேசினர்.

இது தனிப்பட்ட சம்பவமல்ல. குடும்பச் சொத்து ஆண்களுக்கு மட்டும்தான் என்றொரு மனநிலை காலங்காலமாக சில இடங்களில் நிலவி வருகின்றது.

பெண்களுக்கு இஸ்லாம் எல்லா உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் தரும் சொத்தின் பங்கு என்பது அவர்கள் போடும் பிச்சை அல்ல. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த உரிமை. அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். (அன்னிஸா 4:11)

இங்கே பெண்களுக்குக் கிடைக்கும் பங்கை அளவுகோலாக வைத்துத்தான் அல்லாஹ் ஆண்களுக்குரிய சொத்தின் பங்கைக் கூறுகின்றான். ஆக, பெண்களுக்குக் கிடைக்கும் பங்குதான் அடிப்படை. அந்த அடிப்படையில்தான் ஆண்களின் பங்கு பிரிக்கப்படுகிறது.

இஸ்லாம் பெண்களின் உரிமைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. எந்த விஷயத்திலும் இஸ்லாம் பெண்களைப் புறக்கணித்ததில்லை. மாறாக, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது.

ஆனால் சமூகம் பெண்களைப் புறக்கணிக்கின்றது. ஒரு உரிமையும் அவர்களுக்கில்லை என்பது போல் நடந்து கொள்கிறது.

சொத்துரிமைகளைச் சொல்லிக்கொண்டு வரும் இறைவன் இறுதியில் அந்த விவாதத்தை இவ்வாறு முடிக்கின்றான்:

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கின்றானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான். மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அன்னிஸா 4:14)

ஆக, இறைவன் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை மறுப்பவர்கள் இந்த வசனத்தைப் படித்துப் பார்ப்பார்களாக. அல்லாஹ் விதித்த வரம்புகளே சட்டங்கள். நாமாக வைத்துள்ள வரம்புகளெல்லாம் சட்டங்களல்ல என்பதை அவர்கள் மனதில் இறுத்தி வைப்பார்களாக.

நன்றி : தேஜஸ்

தமிழில் : MSAH

-thoothuonline

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: