ஏழைகளின் பங்கு..

அல்ஹம்ந்துலில்லாஹ், இன்னும் ஓரிரு நாட்களில் நம்முடைய புனிதமிகு ராமதான் மாதத்தில் நுழையவிருக்கிறோம். நம்முடைய எல்லா அமல்களும் சரியாக அமைந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் (சுபஹா..) அருள் புரிந்துடுவானாக. ஆமீன்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2

வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான். எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட விட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள்.

கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளை கொண்டதுதான் இவ்வுலக வாழ்க்கை. மிக அற்பமானதொரு வாழ்க்கையை அறியும் உண்மை அறிஞர்களே இந்த உண்மையை ஏற்கமுடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கத்தக்க நிலையை உணரமுடியும். அன்றாடம் சில சில்லறை காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும். Read the rest of this entry »

ரமழான் நோன்பின் சட்டங்கள்

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

Read the rest of this entry »

இதயமெல்லாம் கணிந்து கணிந்து, இறை உணர்வில் சிறந்த மாதம் – ரமளான்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

Read the rest of this entry »

பெண்களே! ரமளானுக்குத் தயாராகுங்கள்!

பார்த்தீர்களா; நேற்றுதான் வந்து போனது போலொரு உனர்வு, இத்தனை வேகமாக வந்து போகின்ற ரமளான்களை, ரஹ்மத் பொருந்திய இந்த மாதத்தை, நன்மைகளைப் பன்மடங்கு அதிகமாகப் பெறக் கூடிய, இலாபம் கொழிக்கப் போகும் இந்த ஸீசனை வீணே விட்டுவிட முடியாது.

ரமளான் வருமுன் அதன் எதிர்பார்ப்பு மனநிலையை உருவாக்கிக் கொள்வது நம்மை அமல்களின்பால் ஆர்வத்தைத் தூண்டி விடும்.

இத்தகைய மனநிலை மீதமுள்ள மாதங்களில் இருக்குமாறு தக்கவைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. இல்லையேல் ரமளானிடம் நாம் தோற்று விடுவோம். நமது வழமையான அன்றாட காரியங்களையும் சிறிது மாற்றமுறச் செய்து ஒரு சிறப்பொழுங்கிற்கு கொண்டு வருவோம். குடும்பத்தவரும் ரமளானும்..

Read the rest of this entry »

” தீமைகளின் கிளையுதிர் காலமே வா…அருகில் வா “

அதோ…நோன்பு வருகிறது என் கல்பு நோக்கி கலிமா வருகிறது

மண்ணிலோ மண்ணுக்கு அடியிலோ அடுத்த ஆண்டிற்கான பயிற்சி பாசறை வருகிறது.

ஓ…ரமலான் நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய் எங்கள் ஆன்மாவின் அழுக்கெடுக்க வருகிறாய்… வா…அருகில் வா,

இனி எங்கள் வீட்டுத் தீமைகள் நெருப்பின் வாடை நுகரும்.. Read the rest of this entry »

%d bloggers like this: