இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் ! இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !

வெற்றியின் இரகசியம்
ஆயிரம் அடிகள் தோண்டிய போதும்
அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் !
தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம்
தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ?

கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை )
கலங்கி ஓடிய சோதனைக் காண்டம்
வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் !
வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் !
பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம்
பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை !
பஞ்சம் நீங்கிடப் பொங்கிய தண்ணீர்
படைத்தவன் அல்லாஹ் அருளின் எல்லை !
பாலையில் பொங்கிய நீரும் அதிசயம் !
பொங்கிய நீரோ நின்றதும் அதிசயம் !
பாலையைப் பெருக்கிப் பாரினில் புகுந்தால் ….
பூமியின் உலகே அழிந்திடும் அவசியம் ?
ஆயிரம் (இ)லட்சம் அருவிகள் இருந்தும்
அகிலம் முழுவதும் அந்நீர் இல்லை !
சேயும் தாயும் தோண்டிய ( ? ) தண்ணீர்
சேரா நாடுகள் உலகில் இல்லை
இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் !
இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !
சொத்தென நினைத்து வைத்தவர் எல்லாம்
சுகந்தரும் மருந்தாய் அம்ருந்துதல் உண்மை !
முதுவைக் கவிஞர் அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

நன்றி :குர்ஆனின் குரல் டிசம்பர் 2010 மற்றும் Mudukulathur

One Response to “இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் ! இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !”

  1. IdrisKhan Says:

    அல்லாஹ்வின் படைப்புகளில் எதிலும் யாராலும் எந்த குற்றமோ குறையோ கண்டு பிடிக்க முடியாது..அவன் மிகைத்தவன் மேலானவன்……..நம்மை படைக்கும் முன்னரே நமக்கு தேவையான உணவினையும் படைத்தவன் அவனே …….. அல்லாஹ்வின் அருட் கொடைகளில் இந்த அற்புதமான ஜம் ஜம் தண்ணீரும் ஒன்று…யா அல்லாஹ் எல்லா புகழும் உனக்கே…உன் ஒருவனுக்கே…


Leave a Reply to IdrisKhan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: