மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்

பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம். அல்குர் ஆ‎ன்:4-4

பிற மதங்களில் இறைவனை [‏இறைவனி‎ன் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை எ‎ன்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் வேண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பி‎ன்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் Read the rest of this entry »

நோயாளியின் தொழுகை

நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும். எனவே! நோய் என்பது அடிப்படையில் குறைபாடாகும். நோயான உடம்பு என்றால் ஆரோக்கியமற்ற, வலிமை குறைந்த உடம்பு என்று பொருளாகும். மேலும் நோயான உள்ளம் என்பது மார்க்க விஷயங்களில் அவரிடம் உள்ள குறைகளையும் சத்தியத்தை விட்டும் தூரமானதையும் குறிக்கும். நோயான உடம்பு என்பது உடல் உருப்புக்களில் ஏற்படும் சோர்வைக் குறிக்கும்.

ஒரு நோயாளியிடம் இருக்க வேண்டிய பொறுமையும் அதற்கான கூலியும்: ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள நோயை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பொறுமையாளிகளுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள நன்மைகளை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நீர் கூறும்; “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”

அல்குர்ஆன் 39-10

 

Read the rest of this entry »

இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் ! இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !

வெற்றியின் இரகசியம்
ஆயிரம் அடிகள் தோண்டிய போதும்
அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் !
தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம்
தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ?

Read the rest of this entry »

விஞ்ஞானம் விழித்திடும்முன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

ஆக்கம் : இப்னு சாஹிபா

இறைமொழியும் நபிமொழியும்

தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன். (மஸ்ஐpதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன்.

(அல்குர்ஆன் 17:1) Read the rest of this entry »

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? Read the rest of this entry »

%d bloggers like this: