பிளஸ்-2 , 10-ம்வகுப்பு தேர்வில் கிராமப்புற மாணவ-மாணவிகளே சாதனை முத்திரை பதித்துள்ளார்கள்

பிளஸ்-2-வை போல் 10-ம் வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டிய கிராமத்து மாணவிகள்: படிப்புக்கு ஏழ்மை தடையில்லை என்று நிரூபித்தார்கள்.

எம் புள்ள டாக்டர் ஆவணும்… என்ஜினீயர் ஆவணும்… என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள்.

பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.

ஆனால் படிப்புக்கு நகரம், கிராமம் என்ற பேதம் இல்லை. நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமத்து மாணவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் கிராமப்புற மாணவ-மாணவிகளே சாதித்து காட்டினார்கள். வெளியிடப்பட்ட 10-ம்வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டி கிராமத்து மாணவ-மாணவிகள் சாதனை முத்திரை பதித்துள்ளார்கள்.

மாணவிகள் மின்னலா தேவி, சங்கீதா, நித்யா, ரம்யா, ஹரிணி ஆகிய 5 பேரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்கள்.

மின்னலாதேவி செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நித்யா ஸ்ரீவில்லிபுத்தூர் எச்.எச். மேல்நிலைப்பள்ளியிலும், ரம்யா மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் பள்ளியிலும், சங்கீதா சேலம் ஆத்தூர் பெரியேரி முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி பள்ளியிலும், ஹரிணி திருவொற்றியூர் அவர் லேடி மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.

495 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பிடித்த மேலப்பாளையம் சதாம் உசேன், தூத்துக்குடி பாக்கியஸ்ரீ, பரமக்குடி அருண் ராஜா, சாத்தூர் ஜெயப்பிரியா, ராஜபாளையம் ஹரிபாரதி, பொன்மணி, பொன்னேரி சீனிரதி ஆகியோரும் கிராமத்து சாதனையாளர்கள்.

இவர்களைப் போல் 3-வது இடத்தை பிடித்த நாகர்கோவில் நிம்ருதா, லட்சுமி பிரியா, சாத்தூர் உமா, உடுமலைப்பேட்டை குங்கும அகல்யா, கவுந்தப்பாடி இந்து, சங்ககிரி லோகேஷ்குமார், கீரனூர் விக்னேஷ்வரி, காரிமங்கலம் காவ்யா, உள்பட 24 பேரில் பெரும்பாலானோர் கிராமப்புற பள்ளிகளில் படித்து சாதனை படைத்துள்ளார்கள்.

தொடர்ந்து 26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சாதனையாளர்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் வளர்ச்சி அடைந்த பெருநகரமான சென்னையில் பிரபல பள்ளிகள் என்ற முத்திரையோடு அண்ணாந்து பார்க்க வைக்கும் பள்ளிகள் பல உள்ளன.

ஆனால் இந்த பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.   கிராமப்புற மாணவ- மாணவிகளின் இந்த விஸ்வரூப வெற்றி சாதனை நகரவாசிகளை மிரள வைத்துள்ளது. நுனி நாக்கு ஆங்கிலம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், அத்தனையும் இருந்தும் கிராமப்புற மாணவ-மாணவிகளிடம் போட்டியிட முடியாதது ஏன் என்று சிந்திக்க வைத்துள்ளது.

இதே வசதி-வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்தால் எட்ட முடியாத சாதனை சிகரத்தை தொடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.   அதேபோல் ஏழை- பாழைகளின் பிள்ளைகளும் சாதிக்கப் பிறந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகி உள்ளது.

மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த நெல்லை மேலப்பாளையம் மாணவன் சதாம் உசேனின் தாயும், தந்தையும் பீடி தொழிலாளர்கள். சென்னை பள்ளிகdளில் முதலிடம் பெற்ற மாணவி ராதிகாவுக்கு தந்தை இல்லை. தாய் வசந்தி தெரு தெருவாக எலுமிச்சைப்பழம் விற்று மகளை படிக்க வைத்துள்ளார். இப்போது டி.ஜி.பி. அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

2-வது இடத்தை பிடித்த மாணவி அனுசுயாவின் தந்தை ஆட்டோ டிரைவர். மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த கவரப் பேட்டை மாணவி சீனிரதியின் தந்தை வெள்ளைச்சாமி நாடார் இனிப்பு பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.

மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த பல்லாவரம் ஷபானாவின் தந்தை செய்யது முகம்மது சமையல் தொழிலாளி ஆவார். மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாணவர் தனசேகரின் தந்தை இறந்து விட்டார். தாய் இந்திரா மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

படிப்புக்கு ஏழ்மை தடை இல்லை. கடின உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை இவர்கள் எடுத்துக்காட்டி உள்ளார்கள்.   சாதனை படைத்த கண்மணிகள் ஒவ்வொருவரும் டாக்டர் ஆவேன், கலெக்டர் ஆவேன் என்று தங்கள் லட்சிய கனவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

நம்முடைய  ஊரை பொருத்த வரை இது வரை இல்லாத அளவிற்கு மிக சிறப்பான மதிபெண்களுடன் மாணவ / மாணவிகள் வெற்றிபெற்றுள்ளார்கள்.

நம்முடைய (உடையநாடு) ஊரை சார்ந்த ரஸ்லின் மரியம் என்ற மாணவி 469 மதிப்பெண்களுடன் முதலாவதாக வந்துள்ளார். அதை போல் அருகில் உள்ள மரக்காவலசையில் அசிரா பானு என்ற மாணவி 480 மதிப்பெண்களை பெற்றுள்ளார். பலர் 400 க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சிறப்பான ஒத்துழைப்பினால் அவர்கள் இச்சாதனை முத்திரை பதித்துள்ளார்கள். இது அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நம்முடைய ஊரின் வளர்ச்சிக்கும் கண்டிப்பாக உதவும்.

வருங்காலங்களில் கல்வியறிவுயின்றி ஏதும் செய்திட இயாலது என்ற உண்மையை மாற்றுக் கருத்துக்கு இடமின்றி அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். பெற்றொர்கள் தடையில்லாமல் அவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு உதவிட வேண்டும்.


Source Help : சித்தார்கோட்டை இனையதளம்

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: