பிளஸ்-2 , 10-ம்வகுப்பு தேர்வில் கிராமப்புற மாணவ-மாணவிகளே சாதனை முத்திரை பதித்துள்ளார்கள்

பிளஸ்-2-வை போல் 10-ம் வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டிய கிராமத்து மாணவிகள்: படிப்புக்கு ஏழ்மை தடையில்லை என்று நிரூபித்தார்கள்.

எம் புள்ள டாக்டர் ஆவணும்… என்ஜினீயர் ஆவணும்… என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள்.

பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.

ஆனால் படிப்புக்கு நகரம், கிராமம் என்ற பேதம் இல்லை. நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமத்து மாணவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் கிராமப்புற மாணவ-மாணவிகளே சாதித்து காட்டினார்கள். வெளியிடப்பட்ட 10-ம்வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டி கிராமத்து மாணவ-மாணவிகள் சாதனை முத்திரை பதித்துள்ளார்கள்.

மாணவிகள் மின்னலா தேவி, சங்கீதா, நித்யா, ரம்யா, ஹரிணி ஆகிய 5 பேரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்கள்.

மின்னலாதேவி செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நித்யா ஸ்ரீவில்லிபுத்தூர் எச்.எச். மேல்நிலைப்பள்ளியிலும், ரம்யா மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் பள்ளியிலும், சங்கீதா சேலம் ஆத்தூர் பெரியேரி முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி பள்ளியிலும், ஹரிணி திருவொற்றியூர் அவர் லேடி மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.

495 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பிடித்த மேலப்பாளையம் சதாம் உசேன், தூத்துக்குடி பாக்கியஸ்ரீ, பரமக்குடி அருண் ராஜா, சாத்தூர் ஜெயப்பிரியா, ராஜபாளையம் ஹரிபாரதி, பொன்மணி, பொன்னேரி சீனிரதி ஆகியோரும் கிராமத்து சாதனையாளர்கள்.

இவர்களைப் போல் 3-வது இடத்தை பிடித்த நாகர்கோவில் நிம்ருதா, லட்சுமி பிரியா, சாத்தூர் உமா, உடுமலைப்பேட்டை குங்கும அகல்யா, கவுந்தப்பாடி இந்து, சங்ககிரி லோகேஷ்குமார், கீரனூர் விக்னேஷ்வரி, காரிமங்கலம் காவ்யா, உள்பட 24 பேரில் பெரும்பாலானோர் கிராமப்புற பள்ளிகளில் படித்து சாதனை படைத்துள்ளார்கள்.

தொடர்ந்து 26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சாதனையாளர்கள் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் வளர்ச்சி அடைந்த பெருநகரமான சென்னையில் பிரபல பள்ளிகள் என்ற முத்திரையோடு அண்ணாந்து பார்க்க வைக்கும் பள்ளிகள் பல உள்ளன.

ஆனால் இந்த பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை.   கிராமப்புற மாணவ- மாணவிகளின் இந்த விஸ்வரூப வெற்றி சாதனை நகரவாசிகளை மிரள வைத்துள்ளது. நுனி நாக்கு ஆங்கிலம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், அத்தனையும் இருந்தும் கிராமப்புற மாணவ-மாணவிகளிடம் போட்டியிட முடியாதது ஏன் என்று சிந்திக்க வைத்துள்ளது.

இதே வசதி-வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்தால் எட்ட முடியாத சாதனை சிகரத்தை தொடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.   அதேபோல் ஏழை- பாழைகளின் பிள்ளைகளும் சாதிக்கப் பிறந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகி உள்ளது.

மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த நெல்லை மேலப்பாளையம் மாணவன் சதாம் உசேனின் தாயும், தந்தையும் பீடி தொழிலாளர்கள். சென்னை பள்ளிகdளில் முதலிடம் பெற்ற மாணவி ராதிகாவுக்கு தந்தை இல்லை. தாய் வசந்தி தெரு தெருவாக எலுமிச்சைப்பழம் விற்று மகளை படிக்க வைத்துள்ளார். இப்போது டி.ஜி.பி. அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

2-வது இடத்தை பிடித்த மாணவி அனுசுயாவின் தந்தை ஆட்டோ டிரைவர். மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்த கவரப் பேட்டை மாணவி சீனிரதியின் தந்தை வெள்ளைச்சாமி நாடார் இனிப்பு பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார்.

மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த பல்லாவரம் ஷபானாவின் தந்தை செய்யது முகம்மது சமையல் தொழிலாளி ஆவார். மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாணவர் தனசேகரின் தந்தை இறந்து விட்டார். தாய் இந்திரா மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

படிப்புக்கு ஏழ்மை தடை இல்லை. கடின உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை இவர்கள் எடுத்துக்காட்டி உள்ளார்கள்.   சாதனை படைத்த கண்மணிகள் ஒவ்வொருவரும் டாக்டர் ஆவேன், கலெக்டர் ஆவேன் என்று தங்கள் லட்சிய கனவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

நம்முடைய  ஊரை பொருத்த வரை இது வரை இல்லாத அளவிற்கு மிக சிறப்பான மதிபெண்களுடன் மாணவ / மாணவிகள் வெற்றிபெற்றுள்ளார்கள்.

நம்முடைய (உடையநாடு) ஊரை சார்ந்த ரஸ்லின் மரியம் என்ற மாணவி 469 மதிப்பெண்களுடன் முதலாவதாக வந்துள்ளார். அதை போல் அருகில் உள்ள மரக்காவலசையில் அசிரா பானு என்ற மாணவி 480 மதிப்பெண்களை பெற்றுள்ளார். பலர் 400 க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சிறப்பான ஒத்துழைப்பினால் அவர்கள் இச்சாதனை முத்திரை பதித்துள்ளார்கள். இது அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நம்முடைய ஊரின் வளர்ச்சிக்கும் கண்டிப்பாக உதவும்.

வருங்காலங்களில் கல்வியறிவுயின்றி ஏதும் செய்திட இயாலது என்ற உண்மையை மாற்றுக் கருத்துக்கு இடமின்றி அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். பெற்றொர்கள் தடையில்லாமல் அவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு உதவிட வேண்டும்.


Source Help : சித்தார்கோட்டை இனையதளம்

நம்முடைய குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி?

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை

எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.

உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.

விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.

ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.

வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.

அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.

பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.

உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.

ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.

பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.

மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.

ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.

பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள்.

ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.

பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.

அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.
11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்? அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்? ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.

அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.
கட்டளையையும் 20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.

சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.

சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.

அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்?

தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

டீன் பட்ஜெட்

இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.

பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.

எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.

அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள்.

இது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.

ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.
1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.

எனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா?

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?

நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.
பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?

அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?

தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?

ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.

விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்ஸ

உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உதாரணங்கள் மூன்று.

ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது…

thanks to: nidur.info – நன்றி : சித்தார்கோட்டை இனையதளம்

இஸ்லாம் ஒன்றே தற்கொலைக்கு தீர்வு

தற்கொலை – இன்றைய செய்தியும் இஸ்லாமிய செய்தியும்!

உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம்.
இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில்தற்கொலை செய்து கொள்கின்றனர்.
நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின்
விகிதம் 11 விழுக்காடு என தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதுமிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

சமீப காலமாக அதிகரித்துவரும் குடும்ப பிரச்சனைதகள் மற்றும் காதல் தோல்விகளால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்
கொள்ளும் தற்கொலை சம்பவங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் சுமார் 775 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு, காதல் தோல்வி, கடன் பிரச்சனை, தீராத நோய் போன்ற பலவிதமான
காரணங்களுக்காக கடந்த 2010ஆம் ஆண்டில் 775 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது காவல்துறை விசாரணையில்
தெரிய வந்துள்ளது. இதில் 35 முதல் 55 வயதுடையவர்கள் அதிகமாக தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

பரீட்ச்சையில் தோல்வி, கடன் பிரச்சனைக்காக 6.5 சதவீதமும், குடும்பப் பிரச்னைக்காக 60சதவீதம் பேரும் தற்கொலை
செய்துகொண்டுள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம்ஆகியவற்றால் 28 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2009ஆம் ஆண்டில் இதே போன்ற காரணங்களுக்காக 701 பேர்தற்கொலை செய்துகொண்டனர்.. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்.சிவானந்தம், “தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் அதிகமாக தற்கொலை செய்துகொள்வோர் குடும்பப்பிரச்னையில் தான் தற்கொலை செய்து
கொள்கின்றனர். கணவன், மனைவி இடையே பரஸ்பரம்விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்வு இல்லாமை போன்றவையே
முக்கிய காரணங்களாகும். இதற்குதற்கொலை தீர்வு ஆகாது.
இதுபோன்ற தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு
கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தற்கொலை செய்துகொள்வோரின்
எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.

தற்கொலையை தடுக்கும் இஸ்லாமிய செய்தி:

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 5778 – அபுஹூரைரா(ரலி)

யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொணடேயிருப்பார்.

இது மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வோருக்கு ஜனாசா தொழுகை எனப்படும் இறுதி பிரார்த்தனை கூட கிடையாது எனும் மார்க்க சட்டத்தின் படி முஸ்லிம்களின் தற்கொலை விகிதசாரம் மற்ற மதத்தினரை விட மிகக்குறைவாக இருப்பதாக தற்கொலை குறித்த ஒரு தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது! ஆக இஸ்லாம் ஒன்றே தற்கொலைக்கு தீர்வு என்பதை உலகிற்கு இந்த செய்தி உணர்த்துகிறது!

தகவல்-நூருல் அமீன்

நன்றி : சித்தார்கோட்டை இனையதளம்

ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது.

தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை,தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!

வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.

சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.

ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது.

எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு!

எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.

குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்!

எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

“பார்-டைம் காலேஜ்” ஸ்டூடன்ஸும் கல்விக்கடன் வாங்கலாம்

ஈவினிங் காலேஜில் சேர்ந்து படுக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு அதாவது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ.சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான்றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு கடன் கிடையாது.

கடன் வழங்க விமுறைகள்:

டியூசன் கட்டணம், புத்தகம், தேர்வு கட்டணம், விடுதி, லேப்-டாப், போக்குவரத்து கட்டணம், வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கட்டணம் அனைத்திற்கும் கடன் உண்டு. உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க 20 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டியவை:  

பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் இணை விண்ணப்பதாரராக, கடன் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் தாத்தா அல்லது சட்ட ரீதியான உறவினர் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பதாரர், இணை விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடியிருப்புச் சான்று, கல்லூரி சேர்க்கை அடையாளச் சான்று, “கவுன்சிலிங்’ கடிதம் அல்லது நிர்வாக இடஒதுக்கீட்டில் அனுமதித்தற்கான கடிதம், இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதற்கான கல்லூரி முதல்வரின் கடிதம், மூன்று அல்லது நான்காண்டுக்கு ஆகும் மொத்த கல்விக் கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்புக்கு அருகில் உள்ள வங்கியில் தான் கடன் பெறலாம்.

முதல் தலைமுறை மாணவர்ளுக்கு:

முதல் தலைமுறையாக பி.இ., பி.டெக்., தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 20 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இச்சலுகை இல்லை. படித்து முடித்த இரண்டாண்டு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி சுமையை குறைக்கும் வகையில், திருப்பி செலுத்தும் காலம் பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  வங்கியில் ஏற்கனவே வேறு கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தாவிட்டால் கல்விக்கடன் வழங்கப்படாது. அனைத்து வங்கிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நான்கு லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, விண்ணப்பதாரர் பங்களிப்பு இல்லை. நான்கு முதல் பத்து லட்ச ரூபாய்க்கு ஐந்து சதவீத பங்களிப்பு. ஜாமீன், சொத்து பிணையம் தேவையில்லை. 7.5 லட்ச ரூபாய் வரை மூன்றாம் நபர் ஜாமீன் உண்டு. 10 லட்ச ரூபாய் வரை, சொத்து பிணையத்துடன். வெளிநாட்டு படிப்புக்கு 15 சதவீத பங்களிப்பு. மாணவியருக்கு வட்டியில் அரை சதவீத சலுகை உண்டு. பாரத ஸ்டேட் வங்கியில் நான்கு லட்ச ரூபாய் வரை, வட்டி 12.25 சதவீதம். 4 முதல் 7.5 லட்சம் வரை 13.75 சதவீதம், 10 லட்ச ரூபாய் வரை 12.25 சதவீத வட்டி. கனரா வங்கியில் நான்கு லட்சம் வரையான கடனுக்கு 13 சதவீதம், அதற்கு மேல் 14 சதவீத வட்டி.

நன்றி: வெளிச்சம் மாணவர்கள்

As We received in an email -Udayanadu admin.

%d bloggers like this: