நீ ஆம்பளயா இருந்தா… விஜயகாந்தை விளாசும் வடிவேலு !?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் 41 சீட் வாங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு விஜய்காந்தை தாக்கோ தாக்குன்னு தாக்கி வருகிறார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘’அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, ‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு…’’ன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார். வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)

நான் சொன்னேன் எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு. அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க. என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.

ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா. விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.

நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற. டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.

ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்…ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே. முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசி எடுத்தார் வடிவேலு.

Source : sakthistudycentre blog

One Response to “நீ ஆம்பளயா இருந்தா… விஜயகாந்தை விளாசும் வடிவேலு !?”

 1. NASEER AMJAD Says:

  ethu allam verum kathai than –
  yarau nanthalum namaku anna ,
  namma nadu nlla erunthaa than namaku nallathu .antha arashiyal vanthalum namaku virubam than.
  annava erunthalum nalla arashiyalaka erukka ventum athu than namaku nallathu.
  annudaya verubam thathan allaruthaya vraumabam . ethananal .
  namaku nalla


தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: