அன்னை ஆயிஷா(ரலி) மதரஸா

அஸ்ஸலாமு   அலைக்கும்
… எல்லாம்  வல்ல  இறைனனின் அருளால் இன்ஷா அல்லாஹ் வரும் 02/03/2011 அன்று நம் உடையநாட்டின் அன்னை ஆயிஷா(ரலி) மதரஸா புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. இது மென்மேலும் வளர்ந்து பல சிறப்புகளை பெற்றிட எல்லாம் வல்ல ரப்புல் ஆலமின் அருள் புரியட்டும். ஆமின். இதில் நாம் அனைவரும் கலந்து கலந்து கொண்டு நம் ஊரின் மதரஸாவிற்க்காகவும் எதிர்கால சந்ததிகளுக்காகவும் துவா செய்து அவனுடைய ரஹ்மத்தையும் பரக்காத்தையும் பெறுவோம். ஆமின்.

…

Register your religion “Muslim” as printed in Census form: Mushawarat

Register your religion “Muslim” as printed in Census form: Mushawarat

http://www.twocircles.net/2011feb08/register_your_religion_%E2%80%9Cmuslim%E2%80%9D_printed_census_form_mushawarat.html

Census 2011   –    By TCN News,

U R G E N T

New Delhi: All India Muslim Majlise Mushawarat has appealed to Muslims to register their religion as “Muslim” – as it is printed in the Census 2011 form – and not insist on Islam as there is the word “Muslim” under religion section, not Islam.

“If you tell them your religion is Islam, not Muslim, it is most likely the illiterate Census workers will put your name in Other Religions section, and thus the actual number of Muslims will go down,” Dr Zafrul Islam Khan, Acting President of Mushawarat said in a statement today.

Commenting on the error in the Census form he said that the officials have erred to put Muslim as religion of Muslims. The religion of Muslims is Islam, not Muslim, he said. But he cautioned that correcting the error can be done only through court while the second and last part of the Census is going to start on 9th Feb 2011 so it is better to put your religion as Muslim for the greater interest of the community.

He appealed to the spread this message through statements and ads in newspapers, announcements from mosques and distributing handbills.

http://Groups.Yahoo.com/Group/CoolCollectionsForYou

வெளிநாட்டு வாழ் தமிழர் நலக் குழுமம் – மசோதா சட்டமன்றத்தில் தாக்கல்

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு உதவ புதிய குழுமம் ஒன்றை ஏற்படுத்த வகை செய்யும் சட்ட முன் வடிவு (Draft) சட்டமன்றத்தில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி சார்பில் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

“வரலாற்றின்படி தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும் படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார காரணங்களுக்காகவும் பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைத்துக் கொள்ளாத, வேலையில் இருக்கும்போதும் அதற்கு பிறகும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும், சட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி செல்ல தன்னைச் சார்ந்து இருப்பவர்களை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு வேலை தேடிச்செல்வோர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்களால் தீர்வு காணவும் முடியவில்லை.

எனவே தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைக்காத தமிழர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குவது முக்கிய கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

வெளிநாட்டில் இறக்கும் தமிழர்களின் உடல்களைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதிஉதவி வழங்குவதோடு, அதன்பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தாலும் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்தக் குறைகளைத் தீர்க்கவும், அவர்கள் தொடர்பு கொள்வதற்குத் தமிழக அரசின் கீழ் தனியாக ஒரு அமைப்பு இல்லாத பெரிய குறையாக உள்ளது.

எனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதன்கீழ் ஒரு நலநிதியத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி நிர்வகிக்க ஒரு குழுமத்தையும் நிறுவ உள்ளோம். இந்த நோக்கத்திற்காக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளது.”

இவ்வாறு சட்ட முன் வடிவில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி: இந்நேரம்.காம்

சின்ன குழந்தையாகவே ….இருந்திருக்கலாம் ….ல

“கன்னத்தில் வைக்கும்
திருஷ்டி போட்டு ….
அழுதால் சாப்பாடு …..
அடிக்கடி முத்தங்கள் …
நிறைய செல்ல பெயர்கள் ….

நீண்ட உறக்கம் ….

யாரும் தூக்கி
வைத்துக் கொள்வார்கள் …..
தத்தி தத்தி
பேசும் அழகுதமிழ்…..
தரையில் விட்டதில்லை ….
யாரைப்  பார்த்தும்
சிரிக்கலாம் …..
நிலா காட்டி சோறு ….
இரவு தாலாட்டு ……
ஊசி இல்லாத மருத்துவம் …..
அதிக சிந்திக்காத மூளை …
வெட்கப்படாத
ஆடை நிர்வாணங்கள்……
பாட்டி வடை சுட்ட கதை ….
சுகமில்லாமல் நான்
தூங்கினாலும் …விழித்திருக்கும்
அம்மா…..
நாளை பற்றி
இல்லாத பயம் …..
…….ச்..ச்ச ……..
சின்ன குழந்தையாகவே ….
…இருந்திருக்கலாம் ….ல …..
—சு.அப்துல் ஹக்கீம் …..,திருநெல்வேலி …

UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet)

அஸ்ஸலாமு அலைக்கும்,
…
அல்ஹம்ந்துலில்லாஹ் ,

UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு (2nd meet) நிகழ்வு 04/02/2011 அன்று துபாயில்நடைப்பெற்றது.

இதில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அதன் பணிகளையும் பற்றி விவாதிக்கப்பட்டது.
…புதிய கொள்கைகள் , சகோதரர்களின் நலன்கள் , உடையநாடு மதரஸா ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த அமைப்பின் நோக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டவைகள் :

1.நம்மால் முடிந்த உதவியை நம் ஊரில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு செய்வது.
2.நம்முடைய ஊரின் முன்னேற்றம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்முடைய சகோதர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்வது.
3.ஏழை மக்களின் திருமணம் / கல்வி / பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்வது.
4.பைத்துல் மால் / 27ம் நோன்பு விழா / மெஹராஜ் விழா ஆகியவற்றிற்கு உதவி செய்வது.
5.வட்டியில்லா சிறு சேமிப்பு (எதிர்க்காலத்தில்)

…

மேலும் எதிர்காலத்தில் நம்முடையா ஊரின் வளர்ச்சியுலும், சீர்த்திருத்தங்களிலும் இந்த அமைப்பின் மூலம் சமூக சேவை / உதவிகள் சீரிய முறையில் செய்ய எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரியட்டும்.. ஆமின்

——————————————————————————————
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8

%d bloggers like this: