இஸ்லாம்

நல்ல நண்பன், கெட்ட நண்பன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம்.

கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.
அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி).
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

இறைவனுடன் நெருக்கமான நேரம்

“உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்”
-நபி(ஸல்)

நூல்: முஸ்லிம்

பாவ மன்னிப்பு

“இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்” என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: திர்மிதி

உயிரோடு நீ… தொழு!

கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை…
இறைவனைத் தொழு!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு…

புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு…

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு…

மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு…

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!

காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!

கடமையுணர்ந்து தொழு!

கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!

உறுதியாகத் தொழு

உபரியையும் தொழு!

அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு

உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ…
தொழு!

தகவல் : ஜாஹிர் ஹுசேன்.

—————————————————————————————————-

Tony Blair reading Quran – குரான் படிக்கிறார் டோனி பிளேர்

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.

இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

—————————————————————————————————-

இறை அழைப்பு பணி தமக்கு கிடைக்கப்பெற்றதும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை ‘ஸபா’ மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்:

“இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை
நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மக்கள்: ‘ஆம், நம்புவோம்’

முஹம்மத் (ஸல்) : ‘ஏன் நம்புவீர்கள்’

மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’

முஹம்மத் (ஸல்) : ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’ ” – (ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)

“உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன்.அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்”

———————————————————————————————————————

தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

சபையை முடிக்கும் போது

ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.

இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.

ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.

இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ 1327

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
சாப்பிடும் போதும், பருகும் போதும்

பி(இ)ஸ்மில்லாஹ்

அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா

இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்: புகாரி 5858

அல்லது

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்

இதன் பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல. ஆதாரம்: புகாரி 5459

அல்லது

அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915

உணவளித்தவருக்காக

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

இதன் பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 3805

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396

அல்லது

பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 5165, 3283
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் பி(இ)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3280, 5623

கோபம் ஏற்படும் போது

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282

அல்லது

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3276
கழுதை கணைக்கும் போது

அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3303
கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 6995

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742

அல்லது

அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 6743

அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து

பி(இ)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4082

அல்லது

லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம். ஆதாரம்: புகாரி 3616

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(எ)னீ இதா கான(த்)தில் வபா(எ)(த்)து கைரன் லீ

இதன் பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5671, 6351

இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 1525

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

அல்லாஹும்மக்பி(எ)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(இ)ன் ஹஸனதன்

இதன் பொருள் : இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1527

மழை வேண்டும் போது

இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹும்மஸ்கினா – அல்லாஹும்மஸ்கினா – அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் : இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013

அல்லது

அல்லாஹும்ம அகிஸ்னா – அல்லாஹும்ம அகிஸ்னா – அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.

பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014

அளவுக்கு மேல் மழை பெய்தால்

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி

இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1013, 1016

அல்லது

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(இ)லி வல் ஆகாமி வபு(இ)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி ஆதாரம்: புகாரி 1017

மழை பொழியும் போது

அல்லாஹும்ம ஸய்யிப(இ)ன் நாபி(எ)அன்

இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! ஆதாரம்: புகாரி 1032

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ), ஸரீஅல் ஹிஸாபி(இ), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(இ), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ) வமுஜ்ரியஸ் ஸஹாபி(இ) வஹாஸிமல் அஹ்ஸாபி(இ) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் : இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! ஆதாரம்: புகாரி 2966, 3024

புயல் வீசும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர மா உர்ஸிலத் பி(இ)ஹி. வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி

இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496
பயணத்தின் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
அல்லாஹு அக்ப(இ)ர் – அல்லாஹு அக்ப(இ)ர் – அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள்.

பின்னர் ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

இதன் பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 2392

பயணத்திலிருந்து திரும்பும் போது

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

இதன் பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ஆதாரம்: முஸ்லிம் 2392
வெளியூரில் தங்கும் போது

அவூது பி(இ) (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

இதன் பொருள் : முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882
பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது

பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(இ)ர்

இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5565, 7399

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்

அல்லாஹு அக்ப(இ)ர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3348, 4741

மேட்டில் ஏறும் போது

உயரமான இடத்தில் ஏறும் போது அல்லாஹு அக்ப(இ)ர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994
கீழே இறங்கும் போது

உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது

ஸுப்(இ)ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய

ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(இ)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(இ)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(எ)ள்லி(க்)கல் அளீம். ப(எ)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(இ) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(எ) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(இ)(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப(எ)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(இ)ரிக் லீ பீ(எ)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(எ) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(இ)(த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப(எ)ஸ்ரிப்(எ)ஹு அன்னீ வஸ்ரிப்(எ)னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ

இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர் யர்ஹமு(க்)கல்லாஹ்
எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர் யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும் எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! ஆதாரம்: புகாரி 6224
இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹும்மக்பி(எ)ர் லி ………………. வர்ப(எ)ஃ தரஜ(த்)தஹு பி(எ)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(எ) ஹு பீ(எ) அகிபி(இ)ஹி பி(எ)ல் காபிரீன் வக்பி(எ)ர் லனா வலஹு யாரப்ப(இ)ல் ஆலமீன் வப்(எ)ஸஹ் லஹு பீ(எ) கப்(இ)ரிஹி வநவ்விர் லஹு பீ(எ)ஹி.

இதன் பொருள் : இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1528

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

அல்லாஹும்மபி(எ)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(எ)ஹி வபு(எ) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(இ)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(இ)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(இ)ல் அப்(இ)யள மினத் தனஸி வ அப்(இ)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(இ)ல் கப்(இ)ரி

இதன் பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் : இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 367

அல்லது

அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)கும் லாஹி(க்)கூன். ஆதாரம்: முஸ்லிம் 1618

அல்லது

அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்லிமீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(இ)(க்)கும் லலாஹி(க்)கூன்.

இதன் பொருள் : முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 1619

அல்லது

அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(எ)ய(த்)த

இதன் பொருள் : முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1620

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

அல்லாஹும்மபி(எ)ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ

இதன் பொருள் : இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக! ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864

மணமக்களை வாழ்த்த

பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386

அல்லது

பா(இ)ர(க்)கல்லாஹு அலை(க்)க ஆதாரம்: புகாரி 6387

அல்லது

பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பி(எ)ல் கைர் ஆதாரம்: திர்மிதீ 1011

அல்லது

பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பீ(எ) கைரின் ஆதாரம்: அபூதாவூத் 1819

என்று மணமக்களை வாழ்த்தலாம்.

உளூச் செய்யத் துவங்கும் போது

பி(இ)ஸ்மில்லாஹி என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும். ஆதாரம்: நஸயீ 77

உளூச் செய்து முடித்த பின்

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

இதன் பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345
பாங்கு சப்தம் கேட்டால்

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 611
பாங்கு முடிந்தவுடன்

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். )

அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு


அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660

————————————————————————————————————-

ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்

உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்…..இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்..ஓரு ஜ‌னாஸா, நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர். உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து.

அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்.. நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து. இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்…. அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு. அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் முக‌த்தை மூடியிருக்கும் அத‌ன் திறையை மெதுவாக‌ அக‌ற்றுகின்றீர்க‌ள் ?????????????? இப்போது ……. இப்போது நீங்க‌ள் பார்த்த‌து யாரையோ அல்ல உங்க‌ள் சொந்த‌ முக‌த்தைதான்!!!!! நீங்க‌ள்தான் அங்கே மையித்தாக‌ வைக்க‌ப் ப‌ட்டுள்ளீர்க‌ள். ஆசைப்ப‌ட்டு உங்க‌ளை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த‌ உங்க‌ள் வாழ்க்கை முடிந்துவிட்ட‌து. மாடிக்க‌ட்ட‌ட‌ங்க‌ள் க‌ட்டுவ‌த‌ற்காக‌ ஹ‌ஜ் போகாது சேர்த்த‌ உங்க‌ள் ப‌ண‌ம் பிர‌யோச‌ன‌ம‌ற்ற‌தாகிவிட்ட‌து. தொழும் நேர‌ங்க‌ளை ம‌ற‌ந்த்து நீங்க‌ள் க‌ல‌ந்துகொண்ட கூட்ட‌ங்க‌ள் வீணாகிவிட்ட‌து..

உங்க‌ள் ஆட‌ம்ப‌ர‌வாக‌ன‌ங்க‌ள், குழ‌ந்தைச் செல்வ‌ங்க‌ள், அன்பும‌னைவி……….எல்லாமே முடிந்துவிட்ட‌து. இப்போது உங்க‌ளுக்காக எஞ்சி இருப்ப‌து நீங்க‌ள் உடுத்தி இருக்கும் உங்க‌ள் க‌ப‌ன் பிட‌வைம‌ட்டுமே!! உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர்க‌ள் உங்க‌ளை சும‌ந்து உங்க‌ள் நிர‌ந்த‌தர வீட்டில் வைத்துவிட்டார்க‌ள்.

ஒரு பிடி ம‌ண் உங்க‌ள் மேல் விழுகிற‌து. உல‌க‌மே இடிந்து விழுந்துவிட்ட‌து போல் உண‌ர்கிறீர்க‌ள். கொஞ்ச‌மாக‌த் தெரிந்து கொண்டிருந்த‌ வெளிச்ச‌ம் இப்போது அடியோடு இல்லாம‌ல் போய்விட்ட‌து. இந்த‌நிமிட‌ம் …. காரிருளில் நீங்க‌ள் ம‌ட்டுமாக‌ த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.. எல்லோரும் ந‌ட‌ந்துசொல்லும் நில‌ம‌ட்ட‌த்திற்கு கீழால் ஆர‌டி நில‌த்தில் நீங்க‌ள் ம‌ட்டும் ..நீங்க‌ள் ம‌ட்டும் த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.. !!

காசோ ப‌ண‌மோ,குழ‌ந்தைக‌ளோ, ம‌னைவியோ இல்லாதத‌னிமை .. குற‌ந்த‌ப‌ட்ச‌ம் ஓர்கைய‌ட‌க்க‌த் தொலைபேசியாவ‌து, இல்லாதத‌னிமை.. இர‌ண்டு ம‌ல‌க்குமார் உங்க‌ளை நோக்கிவ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள்.. இப்போது நீங்க‌ள் என்ன‌ப‌தில் கூற‌த்தயாராகி இருக்கின்றீர்க‌ள்..அந்த‌ நிமிட‌த்தை கொஞ்ச‌ம் க‌ற்ப‌னையில் கொண்டுவந்து, (இந்த‌க்கேள்விக‌ளை கொஞ்ச‌ம் கேட்டுப்பாருங்க‌ள்..)

நான் உண்மையான‌ ஒருமுஃமீனா?? குரானின் ஒளியில் வாழ்கிறேனா?? தொழுகையை விடாது தொழுகிறேனா?? வ‌ருட‌ம் ஒரு முறை வ‌ரும் ர‌ம‌லானில் அல்லாஹ்வுக்காக‌ நோன்பு நோற்கின்றேனா?? க‌ட‌மையான ஹ‌ஜ்ஜை உரிய‌முறையில் நிறைவேற்றுகின்றேனா?போன்ற இன்னோர‌ன்ன‌ கேள்விக‌ளுக்கு ஆம் என்ற‌ விடையை தைரிய‌மாக‌ கூற‌ப்போகின்றீர்க‌ளா? இல்லை…. கால‌த்தை வீணாக‌க் க‌ட‌த்திவிட்டேனே. ஒரு முறையாவாது அல்ல‌ஹ்வின் திருப்பொருத்த‌த்திற்காக‌ ஹ‌ஜ் செய்திருக்க‌லாமே,

500/= நோட்டுக்க‌ளை விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கொடுத்த‌த‌ற்குப்ப‌திலாக, யாருக்கும் தெரியாம‌ல் ந‌ன்மைக‌ளை கொள்ளை அடித்திருக்க‌ளாமே.. என்நோயை சாட்டுவைத்து நோன்புக‌ளை விட்டு விட்டேனே, கொஞ்ச‌ம் ம‌ன‌ச்சாட்சிக்கு பொருத்த‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்க‌ளாமே. வ‌ட்டி எடுக்காம‌ல் லாபமோ ந‌ட்ட‌மோ வியாபார‌த்தையே முழும‌ன‌தாக‌ செய்திருக்க‌ளாமே. குரான் கூறிய‌ ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே அன்னிய‌ ஆட‌வ‌ர்க‌ளின் முன்னால் என் அழ‌ங்கார‌த்தை ம‌றைத்து க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டும் காட்டி இருக்க‌லாமே.. குழ‌ந்தைக‌ளை சிற‌ந்த‌முறையில் வ‌ள‌ர்த்திருக்க‌லாமே..

தொலைக்காட்சியின் முன்ம‌ண்டியிட்ட‌த‌ற்குப்ப‌திலாக‌ சுஜூதில் இறைவ‌னை நெருங்கி இருக்க‌லாமே.. தொலைபேசியில் அர‌ட்டை அடித்த‌த‌ற்குப்ப‌திலாக‌ குரானுட‌ன் உரையாடி இருக்க‌ளாமே,இல்லை ஏதாவ‌துப‌ய‌னுள்ள புத்த்க‌த்தைவாசித்து இருக்க‌ளாமே.. என கைசேத‌ப்ப‌ட‌ப் போகின்றீர்க‌ளா?????? சிந்தியுங்க‌ள்!!

உல‌க‌ வாழ்க்கை என்ப‌து ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இட‌ம‌ல்ல‌.. காத்திருந்தாலும் இழ‌ந்தால் மீண்டும் கிடைப்ப‌தில்லை. இம்மை என்ப‌து ஒரு ப‌ய‌ண‌ம் தாம‌திக்காம‌ல் எம்மை ம‌றுமையின் வாச‌லில்கொண்டு சேர்த்திடும்.. அந்த‌ப்ப‌ய‌ண‌த்தில் க‌ண் மூடித்த‌ன‌மாய் கால‌த்தை க‌ழிக்காம‌ல் திட்ட‌மிட்டு எம்மை நாம்
வ‌ள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும். இல்லையேல்..எம்வாழ்வும் இவ்விறை வாக்குக‌ளின் பிர‌திப‌ளிப்பாகிவிடும்.

நஊதுபில்லாஹிமின்ஹா…

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ
عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن
مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது

மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا

تَعْمَلُونَ ﴿11﴾

ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான் – நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான். க‌டைசித் தருண‌த்தில் இறைவ‌னிட‌ம் கெஞ்சும் துர‌திஷ்டவாளிக‌ளாய் நாம் இருக்காது,எம்மை இறைவ‌னின் பாதையில் திசை திருப்பிக் கொள்ள‌வேண்டும். ஏனெனில் இறைவ‌ன் த‌ன் அருள்ம‌றையில்

لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.

(சூரார‌ஃத் 11) என‌க் கூறுகிறான்.

Advertisements

தங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்..

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s